For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளி, கல்லூரிகள், விடுதிகளை மூட உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

Pasumpon Muthuramalinga Thevar Statueவரும் 30ம் தேதி நடக்கும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி (பிறந்த தின விழா) அக்டோபர் 22ம்தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளையும், விடுதிகளையும்மூடிவிட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குருபூஜை பாதுகாப்புப் பணிகளில் 6 மாவட்ட கலெக்டர்கள், 6 மாவட்ட எஸ்.பிக்கள்ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவின்போதுஏதாவது அசம்பாவிதங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. தலித்-தேவர் மோதல் அல்லது யார் முதலில் தேவர்சிலைக்கு மாலை அணிவிப்பது என்பதில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் இடையே மோதல் என ஏதாவது சம்பவம்நடப்பது வழக்கம்.

இதனால் ஆயிரக்கணக்காண போலீசார் ராமநாதபுரம், கமுதி, மதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

தென் மாவட்டங்களில் கல்லூரிகளிலும் தேவர் சமுதாய மாணவர்களும் தலித் சமுதாய மாணவர்களும் மோதிக்கொள்வது அதிகரித்து வருவதால் இந்த முறை குருபூஜையின்போது வன்முறையைத் தவிர்க்க பள்ளி, கல்லூரிகளைமூடிவிட அரசு முடிவு செய்துள்ளது. அவற்றின் விடுதிகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழக அரசின் பிற்பட்டோர் நலத்துறை நடத்தும் கள்ளர்- சீர்மரபினர் மாணவர் விடுதிகளையும்,தாழ்த்தப்பட்டோர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளையும் கூட மூடிவிடுவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயக்குமார் கூறுகையில்

குருபூஜையை அமைதியாகவும், வன்முறை ஏதுமின்றி நடத்தி முடிக்க அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.

பஸ்களின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்வது, பாத யாத்திரை செல்வது, ஆட்சேபகரமான கோஷங்களைப்போடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணியில் கமுதியில் உள்ள தேவர் கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுவர். போலீஸ் அனுமதிஉள்ள வாகனங்கள் மட்டுமே பசும்பொன் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படும்.

பாதுகாப்பு கருதி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளையும் மற்றும் விடுதிகளையும் 22ம்தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் ஆட்சித் தலைவர் கூட்டி ஆலோசித்தார். மொத்தம் 6மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் குருபூஜை தொடர்பான பாதுகாப்புப்பணிகளை மேற்பார்வையிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் விடுதலைக்காகவும், தேவர் சமுதாயம் தவிர அனைத்து சமூக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர்முத்துராமலிங்கத் தேவர். ஆங்கிலேயர்களை எதிர்த்து சுபாஷ் சந்திர போஸ் துவக்கிய இந்திய தேசிய ராணுவத்தில்ஆயிரக்கணக்கான தேவர் சமூக இளைஞர்களை சேர வைத்து தனது நாட்டு பற்றை பறை சாற்றியவர்.

தீவிரமான முருக பக்தர். அதே நேரத்தில் மற்ற மதத்தினரையும் அரவணைத்துச் சென்று அனைத்துத் தரப்பினரின்ஏகோபித்த மரியாதையைப் பெற்றவர் தேவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X