For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரீனாவில் கட்டடங்கள் கட்ட தடை: அமைச்சரவை முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மெரீனா கடற்கரையின் அழகைப் பாதுகாக்கும் வகையில், அங்கு புதிய கட்டடங்கள் கட்ட இனிஅனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரீனா. இங்கிருந்த கண்ணகி சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாகஇருப்பதாகக் கூறி அதை தமிழக அரசு அகற்றியது.

பின்னர் மீனவர் குப்பங்களைத் தூக்கிவிட்டு அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு முடிவு செய்தது. மேதாபட்கர் தலைமையில் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் அத் திட்டத்தை அரசு கைவிட்டது.

இதையடுத்து ராணி மேரிக் கல்லூரிப் பக்கம் அரசு திரும்பியது. ஆனால், மத்திய அமைச்சர் பாலு அதற்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து மெரீனாவை அழகுப் படுத்தும் திட்டத்தை அரசு கையில் எடுத்தது. சீரணி அரங்கம், தனியாருக்குச்சொந்தமான உணவகம் ஆகியவற்றை இரவோடு இரவாக அரசு இடித்துத் தரைமட்டமாக்கியது. மெரினாவில்மீனவர்களுக்குக் குடிநீர் வழங்கி வந்த கிணறும் மூடப்பட்டது. மெரீனாவை அழகுபடுத்தும் திட்டத்தை மலேசியநிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது.

இதனையடுத்து மணலை சலித்தெடுக்கும் நவீன இயந்திரம் மூலம் மெரினா கடற்கரை மணல் முழுவதும்சலித்தெடுக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டன.

இந் நிலையில், இன்று காலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. 30நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் மெரீனாவில் புதிய கட்டடங்கள் கட்ட இனி அனுமதி தருவதில்லை என்றுமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி தேசியஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், தலைமைச் செயலகஊழியர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X