For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக- அதிமுகவிடம் இருந்து காங்கிரஸ் சம தூரத்தில் விலகி இருக்கும்: தலைவரான வாசன் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக மற்றும் அதிமுகவிடம் இருந்து காங்கிரஸ் சம தூரத்தில் விலகி இருக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சியின்புதிய தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வாசன், டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில்அவருக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கார்களில் ஊர்வலமாக கட்சித் தலைமையகமானசத்தியமூர்த்தி பவனுக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.

அங்கு மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்துகோஷங்களுடன் வாசனை வரவேற்றனர். பின்னர் அவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின்னர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் வாசன் பேசியதாவது:

தமிழகத்தை ஆளும் அதிமுகவுடன் நமக்கு கூட்டணி கிடையாது. அதேபோல் மத்தியில் பா.ஜ.கவுடன் கூட்டணிவைத்துள்ள திமுக மற்றும் பிற கட்சிகளுடனும் உறவு கிடையாது.

சோனியா காந்தியை பிரதமராக்குவதும், தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியையும் அமைப்பதுமே நமதுகுறிக்கோள். தேர்தல் கூட்டணி பற்றி இப்போதே யோசிக்காதீர்கள். தேர்தல் நேரத்தில் சோனியா காந்தி எடுக்கும்முடிவின்படி கூட்டணி அமைப்போம். இப்போது கட்சியைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பணிந்து முதல்வர் பதவியை விட்டு ஜெயலலிதா உடனடியாக விலக வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசலை ஒழிக்க புதிய செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவல்லரசாகவும், தமிழகம் வளமாகவும் திகழ காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

வாசனுக்கு பதவி கிடைத்தது எப்படி?:

வாசனுக்குத் தலைவர் பதவி கிடைத்தன் பின்னணியை விசாரித்தால், பெரும் குழப்பம் மிஞ்சுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான காங்கிரஸ் மூத்த தலைவர் அகமத் படேலின் சிபாரிசு மூலமாகவேவாசனுக்கு தலைவர் பதவி கிடைத்ததாக இளங்கோவன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் சந்தித்து, வாசனைத்தலைவராக்குவது குறித்துப் பேசியதாகவும் தெரிகிறது.

(அப்போது இளங்கோவன் மாற்றப்படுவதில் தனக்கு மன வருத்தம் உண்டு என கருணாநிதி சுட்டிக் காட்டியதாகவும்ஆனால், கருணாநிதியின் இந்த வருத்தம் சோனியாவுக்கு எட்டவில்லை என்றும் சொல்கிறது இளங்கோவன் தரப்பு)

பா.ஜ.கவை விட்டு திமுக விலக மறுத்தால், அதிமுகவின் உதவியை நாடுவதைத் தவிர காங்கிரசுக்கு வேறுவழியில்லை. யாருடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்தாமல் திமுக தொடர்ந்து மெளனம் காத்து வருவதால்,அதிமுகவுடனான உறவுக்கு இளங்கோவன் செய்த டேமேஜ்களை சரி செய்து வைத்துக் கொள்வதே உத்தமம் எனசோனியாவுக்கு எடுத்துரைக்கப்பட்டதாகவும், இதனால் தான் வாசன் தலைவராக்கப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.

இப்போதைக்கு அதிமுக எதிர்ப்பை கடைபிடிக்குமாறும் வாசனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் தனக்கு முக்கியப் பதவி ஏதும் தராமல் காங்கிரஸ் தலைமை நடு ரோட்டில் விட்டால், தனிக் கட்சிஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இளங்கோவன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X