For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2015ம் ஆண்டில் இந்தியா பிராந்திய வல்லரசாகும்: அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

-டி.வி. பரசுராம்

வாஷிங்டன்:

2015ம் ஆண்டில் இந்தியா பிராந்திய அளவிலும், பொருளாதாரரீதியிலும் வல்லரசாக மாறும் என்று அமெரிக்காஉளவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவுப் பிரிவின் இயக்குனர் ஜார்ஜ் டெனட் தலைமையிலான US NationalIntelligence Council 2015ல் உலக நாடுகளின் நிலை பற்றிய தனது 59 பக்க ஆய்வு அறிக்கையை அமெரிக்கஅரசிடம் வழங்கியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் மக்கள் தொகை 2015ம் ஆண்டு 1.2 பில்லியனாக உயரும். தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியோடுபொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி பெற்று, ஆசியப் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத மாபெரும் வல்லரசாகஇந்தியா உருவெடுக்கும்.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை சமாளிக்க சீனா, ரஷ்யா, இந்தியாஇடையே புதிய கூட்டணி உருவாகும். இதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சமாளிக்க புதியவழிமுறைகளைக் கையாள வேண்டி வரும்.

கல்வித்துறையில் இந்தியா பலம் வாயந்தது விளங்கும் அதே நேரத்தில் ஜனநாயக ஸ்திரத்தன்மையும் உள்ளது.மேலும் ஆங்கில அறிவும் நிறைந்திருப்பதால் தகவல் தொழில் நுட்பத்துறையில் சர்வதேச அளவில் இந்தியா மேலும்வளரும். இந்தத் துறையில் வளரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கும்.

பணக்காரர்கள் தொடர்ந்து பெரும் பணக்கார்களாக மாறுவது, ஏழை தொடர்ந்து பரம ஏழையாக மாறுவது போன்றபொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவதிலும், உலகமயமாக்கலின் காரணமாக விளைகின்ற எதிர்மறைவிளைவுகளைக் களைவதிலும், நிர்வாக சீர்கேடுகளைக் களைவதிலும் இந்தியா எந்த அளவிற்கு செயல்படுகிறதுஎன்பதைப் பொறுத்தே வல்லரசை நோக்கிய அதன் பாதை இருக்கும்.

குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவது அந் நாட்டுக்கு பெரும் சவாலாகஇருக்கும்.

அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் போர் மூளுவதற்கான சாத்தியக்கூறுகள்அதிகரிக்கும். இரு நாடுகளும் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் உற்பத்தி செய்வதுஅதிகரிக்கும்.

போர் குறித்த அச்சம் பிராந்திய அளவில் மற்ற நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாகஇந்தியா தனது ஆயுத பலத்தை பெருக்கிக் கொள்ளவும், அத்துமீறலுக்கு எதிராக கடுமையான பதில்நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முயலும்.

இந்தியாவுக்குப் போட்டியாக பாகிஸ்தானும் தனது அணு ஆயுத பலத்தை பல மடங்கு அதிகரிக்கும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X