For Quick Alerts
For Daily Alerts
Just In
விருதுநகரில் ரூ. 10 லட்சம் திருட்டு ஜீன்ஸ் பேன்ட்டுகள் மீட்பு: 3 பேர் கைது
விருதுநகர்:
கண்டெய்னர் லாரியிலிருந்து திருடப்பட்டு கடத்தப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஜீன்ஸ் பேன்ட்டுகளைவிருதுநகர் போலீஸார் மீட்டுள்ளனர்.
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீஸார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அப்போது ஒரு மினி லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீஸார் நிறுத்திசோதனையிட்டனர்.
அப்போது லாரிக்குள் 57 சாக்கு மூடைகளில் ஜீன்ஸ் பேன்ட்டுகள் இருந்தன. இது குறித்து போலீஸார்விசாரித்தபோது, சாலையோரம் நின்றிருந்த ஒரு கண்டெய்னர் லாரியிலிருந்து இந்த ஜீன்ஸ் பேன்ட்டுகளைதிருடியதாக லாரியில் இருந்த 3 பேரும் தெரிவித்தனர்.
அதன் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!