தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்!
சென்னை:
தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் கன மழை பெய்வதறகான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தென் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம், வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது,மேலும் அது புயல் சின்னமாகவும் உருவெடுத்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் நாகப்பட்டனம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும்,பாண்டிச்சேரியிலும் கன மழை பெய்யக் கூடும் என்று தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் இந்த கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்எச்சரித்துள்ளது. வட தமிழகத்தின் கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்றும், கடல் கொந்தளிப்பும் காணப்படும்.மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!