For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கதறி அழுத ஜனனி கோர்ட்டில் பரபரப்பு விவாதம்!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள இளம் பெண் ஜனனியும், அவரது தாயார் ரமீஜாவும் மதுரை போதைப் பொருள்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கதறி அழுதனர். மதுரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது சரமாரியாக புகார் கூறினர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி, தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மதுரைபோதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி சம்பத்குமார் முன்பு ஜனனிகதறி அழுதார். எனது வலி யாருக்கும் புரியவில்லை.

கஞ்சா என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. இதுவரை நான் கஞ்சாவை பார்த்தது கூட இல்லை. என்னைப்பழிவாங்கவே இந்த பொய் வழக்கைப் போட்டுள்ளனர். கருப்பாயூரணி போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கணேசன்தான் எனது வீட்டில் கஞ்சாவைப் போட்டிருக்க வேண்டும்.

என் மீதான புகார் உண்மையானது என்று தனது குடும்பத்தின் மீது சப் இன்ஸ்பெக்டரை சத்தியம் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம்.

அரசு வக்கீலுக்கு எனது தந்தை வயதிருக்கும். என் வயதில் நிச்சயம் அவருக்குப் பெண் இருப்பார் என்றார்.அப்போது குறுக்கிட்ட ஜனனியின் தாயார் ரமீஜா, என் பெண் முகத்தைப் பார்த்தால் கஞ்சா விற்பவரைப் போலவாதெரிகிறது? எங்களைத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே என்று ஆவேசமாகக் கேட்டார்.

அவரை சாந்தப்படுத்திய ஜனனி, நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். என்னிடம் ரகசிய விசாரணைநடத்துங்கள். நான் பல உண்மைகளை சொல்ல வேண்டியுள்ளது என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். அதைஏற்க மறுத்த நீதிபதி சம்பத்குமார், எதுவாக இருந்தாலும் உங்களது வழக்கறிஞரிடம் பேசுங்கள் என்றார்.

பின்னர் ஜனனியின் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதில், ஜனனி சார்பில்உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் 3 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஒரு மனுவில் ஜனனிக்குஜாமீன் வழங்க வேண்டும், 60 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற நிபந்தனையைத்தளர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது மனுவில், ஜனனியின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரியும், மூன்றாவது மனுவில் சிபிஐவசம் இந்த வழக்கை ஒப்படைக்கக் கோரியும் மனு செய்யப்பட்டுள்ளது. எனவே குற்றச்சாட்டு பதிவு செய்வதைதள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி சம்பத்குமார், வருகிற 22ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X