For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதிகள் மோதல்: அரசு ஊழியர் வழக்கில் நீதிபதி சம்பத் மீது நீதிபதி தங்கவேலு சரமாரி புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வேலை நிநறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்களின் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள்குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதி சம்பத், தீர்ப்பு வழங்குவதில் மிகவும் அவசரப்பட்டு நடந்து காண்டுள்ளதாகமற்றொரு நீதிபதியான தங்கவேலு சரமாரியாக புகார் கூறியுள்ளார்.

கடந்த ஜுலை மாதம் நடந்த அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டஊழியர்களின் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதிகள் சம்பத், தங்கவேலு, மலை சுப்ரமணியம்ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் முதல் கட்டமாக தலைமைச் செயலகம், சென்னை மாவட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளைவிசாரித்து அரசுக்கு அறிக்கை கொடுத்திருந்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை பதவி நீக்கம்செய்யவும், பலர் மீது சம்பளக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் பரிந்துரைத்திருந்தனர்.

அடுத்த கட்டமாக பிற மாவட்ட அரசு ஊழியர்கள் தொடர்பான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு அதன்முடிவுகள் அறிவிக்கப்பட இருந்தன.

இந் நிலையில் கடந்த 26ம் தேதி நீதிபதிகள் சம்பத் மற்றும் மலைசுப்ரமணியம் ஆகிய இருவர் மட்டும் விசாரணைஅறிக்கையை அரசிடம் வழங்கினர்.

நீதிபதி தங்கவேலு தனது அறிக்கையை அன்று வழங்கவில்லை. அவர், இன்று தனது அறிக்கையை வழங்குவார்என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந் நிலையில் நீதிபதி தங்கவேலு இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நீதிபதி சம்பத் மீதுஅவர் சரமாரியாக புகார் தெரிவித்தார். நீதிபதி தங்கவேலு கூறியதாவது:

வெளி மாவட்ட அரசு ஊழியர்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை 31ம் தேதி அரசிடம் வழங்குவது என்றுஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நீதிபதி சம்பத் மிகவும் அவசரப்பட்டு 26ம் தேதியே அரசிடம்அறிக்கை கொடுத்துள்ளார்.

தீர்ப்பு தேதி 31 என்று முடிவான நிலையில், முந்திக் கொண்டு போய் கொடுப்பது நீதிபதிக்கு அழகா? அதற்கு என்னஅவசியம் வந்தது? நான் எனது விசாரணை அறிக்கையை நாளைதான் அரசிடம் வழங்கவுள்ளேன்.

இதேபோல, தலைமைச் செயலக ஊழியர்கள் வழக்குகள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஒரு நாள்தாமதப்படுத்தி நீதிபதி சம்பத் அரசிடம் சமர்ப்பித்தார். விசாரணை அறிக்கை அடங்கிய பெட்டி அவரது கோர்ட்டில்ஒரு நாள் வைக்கப்பட்டு அடுத்த நாள் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனது விசாரணையில், ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள், உடல் ஊனமுற்றோர், தலையாரிகள்உள்ளிட்டோருக்கு கருணை காட்டியுள்ளேன். தீர்ப்பின் முழு விவரம் நாளை தெரிய வரும் என்றார் நீதிபதிதங்கவேலு.

நீதிபதி தங்கவேலுவின் சரமாரி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலக ஊழியர்கள் பலர் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள பின்னணியில், அது தொடர்பானவிசாரணை அறிக்கையை நீதிபதி சம்பத் ஒரு நாள் தாமதப்படுத்தி அடுத்த நாள்தான் அரசிடம் கொடுத்தார் என்றுநீதிபதி தங்கவேலு கூறியிருப்பது டிஸ்மிஸ் ஆன தலைமைச் செயலக ஊழியர்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X