• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரபரப்பு நிறைந்த 2003

By Staff
|

சென்னை:

அரசு ஊழியர்களை ஜெயலலிதா ஒட்டுமொத்தாக டிஸ்மிஸ் செய்தது, நக்கீரன் கோபால் பொடா சட்டத்தில் கைது,ராணி மேரிக் கல்லூயை இடிக்க முயற்சி செய்தது, பரபரப்பூட்டிய என்கவுன்டர் சாவுகள், டான்சி வழக்கில்ஜெயலலிதா விடுதலையானது, ஈராக் போர், சதாம் உசேனின் சரண்டர் என இந்தியாவையும், தமிழகத்தையும்,உலகையும் குலுக்கிய பல சம்பவங்களின் நிழல்களோடு 2003ம் ஆண்டு விடை பெறுகிறது.

அடுத்த ஆண்டில் காலடி வைக்கும் முன்பு கடந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்புகளை ஒருபுரட்டு புரட்டுவோமா?

ஜனவரி:ஜன. 1: உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி டான்சி நிலத்தை அரசிடமே ஜெயலலிதா ஒப்படைத்தார்.

ஜன 6: ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகிரண் பேடி நியமிக்கப்பட்டார்.

தமிழக காவல்துறை டி.ஜி.பி. நெயில்வால் மாற்றப்பட்டார். புதிய டிஜிபியாக ஆர். ராஜகோபாலன்நியமிக்கப்பட்டார்.

ஜன. 7: தமிழகத்தில் அனைத்து மாநில லாட்டரிச் சீட்டுக்களுக்கு மாநில அரசு அதிரடி தடை விதித்தது. லாட்டரிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

ஜன. 10: அதிமுக ஆதரவு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் இணைந்து தமிழ் மாநில காமராஜ்காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினர்.

ஜன. 11: கொலை வழக்கில் தேவேந்திர குல வேளாளர் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு சென்னைநீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது.

திமுக இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் கண்ணகி சிலையை நிறுவினார் கருணாநிதி.

ஜன. 13: பொடா சட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம்விசாரணைக்கு ஏற்றது.

ஜன. 25: கவிஞர் வைரமுத்து, பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஜன. 29: நடிகை பண்டரிபாய் சென்னையில் காலமானார்.

ஜன. 30: தமிழக மாநில காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாக்டர் குமாரதாஸை சட்டசபையில் தாக்கமுயன்றதாக திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டார்.

ஜன. 31: வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழக விவசாயிகளுக்கு 30கிலோ அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

பிப்ரவரி:

பிப். 1: இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பயணித்த அமெக்காவின் கொலம்பியாவிண்கலம் வெடித்துச் சிதறி 7 விண்வெளி வீரர்கள் பலியாயினர்.

பிப். 2: புதிய வீராணம் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

பிப். 9: தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் உலகக் கோப்பை கிக்கெட் போட்டி தொடங்கியது.

பிப். 12: இந்திய- ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவிசோதிக்கப்பட்டது.

பிப். 14: ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

பிப். 26: சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் நிடந்தது. தேர்தலை க்கிய எதிர்க்கட்சியான திக புறக்கணித்தது.

பிப். 28: நடிகர் மேஜர் சுந்தரராஜன் மரணம்.

மார்ச்:

மார்ச் 1: சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.

மார்ச் 2: தமிழகத்தில் உள்ள முக்கியப் பள்ளி வாசல்கள், தர்காக்களில் அன்னதானத் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

மார்ச் 5: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.

மார்ச் 8: பொது இடங்களில் புகை பிடிக்க, எச்சில் துப்ப தமிழக அரசு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது.

மார்ச் 15: விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது.

மார்ச் 20: ஈராக் மீது அமெரிக்க கூட்டுப் படையினர் போர் தொடுத்தனர். குண்டு மழையில் அதிர்ந்தது ஈராக்.

மார்ச் 23: பரபரப்பான உலகக் கோப்பை கிக்கெட் இறுதியாட்டத்தில் இந்தியாவை அபாரமாக வீழ்த்திகோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

மார்ச் 25: சென்னையில் போலீஸ் வேனில் கொண்டு செல்லப்பட்ட தமிழர் விடுதலைப் படை தீவிரவாதிராஜாராமன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏப்ரல்:

ஏப். 1: பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் சென்னையில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

ஏப். 4: சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ள ராணி மேரிக் கல்லூயை இடித்து விட்டு அங்கு தலைமைச்செயலகம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பாக்தாத் விமான நிலையம் அமெக்க கூட்டுப் படையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

ஏப். 6: ராணிமேரிக் கல்லூயை இடித்து விட்டு தலைமைச் செயலகம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது.

ஏப். 9: ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்ந்தது. அமெக்கப் படையிடம் ஈராக் வீழ்ந்தது. சதாம் உசேன் தப்பியோடிதலைமறைவானார்.

ஏப். 11: தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையுடன் சேர்ந்து சதி செய்ததாக கூறி நிக்கீரன் பத்திரிக்கைஆசியர் கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஏப். 16: நக்கீரன் கோபால் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மே:

மே 3: பிரபல திரைப்படத் தயாப்பாளரும், இயக்குனர் மணிரத்தினத்தின் சகோதரருமான ஜி.வி. எனப்படும்ஜி.வெங்கடேஸ்வரன் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மே 8: ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

மே 12: தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

மே 17: வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மே 19: மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுடாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

மே 20: மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், அதிகாலையில் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.

மே 21: தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி கைதுசெய்யப்பட்டார்.

மே 23: உதவியாளர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த பரபரப்பான புகாரையடுத்து தனது மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மதிமுகவின் செஞ்சி ராமச்சந்திரன்.

ஜூன்:

ஜூன் 2: திமுக துணைப் பொதுச் செயலாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பெண் கமாண்டோ படையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

ஜூன் 4: டொமினிக் நாட்டு அழகி அமெலியா வேகா உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 6: சண்டியர் என்ற பெயரில் படம் எடுப்பதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிஎதிர்ப்பு தெரிவித்ததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கமல்ஹாசன் உள்ளிட்டோர் தேனியிலிருந்து சென்னைதிரும்பினர்.

ஜூன் 10: கந்துவட்டி, மீட்டர் வட்டி உள்ளிட்ட வட்டிக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் அவசரச்சட்டத்தைப் பிறப்பித்தது தமிழக அரசு.

ஜூன் 17: காதல் கணவர் சுரேஷ் மேனனுடன் திருமண பந்தம் முடிவடைந்ததாக நடிகை ரேவதி அறிவித்தார்.

ஜூன் 18: சென்னை அருகே திருவேற்காடு கருமாயம்மன் கோவிலில் 1053 ஜோடிகளுக்கு தல்வர் ஜெயலலிதாதிருமணம் செய்து வைத்தார்.

ஜூன் 20: சண்டியர் படப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் கமல்ஹாசன். படப் பெயரைமாற்றப் போவதாகவும் அறிவித்தார்.

ஜூலை:

ஜூலை 2: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.

ஜூலை 5: திருத்தப்பட்ட எஸ்மா சட்டத்தின் கீழ் 1 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்துஇந்தியாவையே கலங்கடித்தது தமிழக அரசு.

ஜூலை 6: ஈரான் நாட்டு தலை ஒட்டிய இரட்டை சகோதரிகள் லேடன், லைலாவை பிரிக்க சிங்கப்பூரில் அறுவைச்சிகிச்சை தொடங்கியது.

ஜூலை 8: லேடன், லைலா சகோதரிகள் அடுத்தடுத்து மரணமடைந்து உலகை கண்ணீல் மூழ்கடித்தனர்.

ஜூலை 11: கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு. டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.

ஜூலை 12: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டிக் கட்சி விலகியது.மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பரூக்கின் மகன் உமர்.

ஜூலை 15: மதுரை இளம் பெண் ஜனனி கஞ்சா கடத்தியதாக கூறி தாயார் மற்றும் டிரைவருடன் கைதுசெய்யப்பட்டார்.

ஜூலை 16: ஜீவஜோதியின் வேதராண்யம் வீட்டிற்குச் சென்று அவரை கடத்த முயன்றதாக கூறி பிரபல ஹோட்டல்அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 22: ஈராக்கில் சதாம் உசேனின் மகன்கள் உதய் மற்றும் குவாசி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜூலை 26: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தன.

ஜூலை 27: சென்னையின் பிரபல தாதா வீரமணி, மெரீனா கடற்கரையில் வைத்து போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட்:

ஆக. 6: அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு சட்டப்படி உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

ஆக. 9: சென்னை மெரீனா கடற்கரையில் பல காலமாக இருந்து வந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட சீரணிஅரங்கம் திடீரென்று இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

ஆக. 11: தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதான அழகிரி ஜாமீனில் விடுதலை. பெங்களூரில் தங்கிகையெழுத்துப் போட உத்தரவு.

ஆக. 13: டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் குழுவைநியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆக. 14: விபச்சார வழக்கில் நடிகை வினிதா, தாயார் மற்றும் தம்பியுடன் கைது செய்யப்பட்டார்.

ஆக. 15: அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தூண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி, மாஜி காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது டெஸ்மா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவானது.

ஆக. 16: ஒரு காலத்தில் உலகைக் கலக்கிய உகாண்டா நாட்டு சர்வாதிகாரி இடி அமீன் செளதி அரேபியாவில்மரணமடைந்தார்.

ஆக. 18: மாத வருவாய் ரூ. 5,000க்கு மேல் உள்ளவர்களுக்கு கெளரவ குடும்ப அட்டையை தமிழக அரசுஅறிமுகம் செய்தது. அவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிப்பு.

ஆக.19: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி, பிரதமர்வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தப்பியது.

ஆக. 26: உ.பி. முதல்வர் மாயாவதி திடீரென்று ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்தது.

ஆக. 28: பா.ஜ.கவின் மறைமுக ஆதரவு மற்றும் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் உதவியுடன் உ.பி. புதியமுதல்வராக முலாயம் சிங் யாதவ் பதவியேற்றார்.

தமிழக கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட தடை விதித்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது.

செப்டம்பர்:

செப். 2: முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

செப். 4: அன்வர் ராஜாவின் அமைச்சர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. வ.து.நடராஜன் மீண்டும் அமைச்சர்ஆனார்.

செப். 6: அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா.

தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகச கண்காட்சி நடத்தப்பட்டது.

செப். 7: ஊழல் புகார் காரணமாக பதவியை ராஜினாமா செய்த செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் மமதா பானர்ஜிஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

செப். 19: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து அத்வானி விடுவிக்கப்பட்டார்.

செப். 22: ஒரிஸ்ஸாவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதியார் கிரஹம் ஸ்டேன்ஸ் கொலை வழக்கில்குற்றவாளி தாராசிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

செப் 26: தூத்துக்குடியைச் சேர்ந்த நாடார் சமூகப் பிரபலம் வெங்கடேச பண்ணையார் சென்னையில் போலீஸாரால்சுட்டுக் கொல்லப்பட்டார்.

நக்கீரன் கோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

அக்டோபர்:

அக். 1: ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி மலையில் குண்டுவெடிப்பில் காயமுற்றார்.

அக். 2: தனியார் மணல் குவாரிகளுக்கான உரிமத்தை ரத்து செய்தது தமிழக அரசு. அரசே மணல் அள்ளிவிற்பனை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அக். 8: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநல ஆளுநர் தேர்தலில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு வெற்றிபெற்றார். ரீகனுக்குப் பின் அரசியலில் முக்கியப் பதவியைப் பெறும் இரண்டாவது ஹாலிவுட் நடிகர் என்றபெருமையும் ஆர்னால்டுக்குக் கிடைத்தது.

அக். 10: ஈரானில் ஜனநாயகம் தழைக்கப் போராடி வரும் ஷெரீன் இபாடிக்கு அமைதிக்கான நோபல் பரிசுஅறிவிக்கப்பட்டது.

பொடா சட்டத்தில் திருத்தம் செய்து அவரசச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதன் மூலம், பொடா மறுஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்தது.

ராஜீவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

அக். 13: மேடையில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் கார் மீதுஅதிமுகவினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். பாண்டிச்சேரிக்கு சென்று உயிர் தப்பினார் மணிசங்கர அய்யர்.

அக். 17: தாவூத் இப்ராகிம் சர்வதேச தீவிரவாதி என அமெரிக்கா அறிவித்தது.

அக். 18: அமைச்சர் வ.து.நடராஜன் பதவி பறிக்கப்பட்டது.

அக். 19: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாடிகன் அறிவித்தது.

அக். 26: தமிழகத்தில் தனியார் மதுக் கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, அரசே மதுக் கடைகளை நடத்தஅவரசச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அக். 27: பாண்டிச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுனர் மல்கானி மரணம்.

அக். 30: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகே கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கான பூமிபூஜை நடத்தினார் ஜெயலலிதா.

ரசிகர்களின் அன்புப் பிடியில் சிக்கி நடிகர் தனுஷின் கை முறிந்தது.

அக். 31: கர்நாடக இசையின் பீஷ்மர் என்று அழைக்கப்பட்ட பிரபல இசைக் கலைஞர் செம்மங்குடி சீனிவாசய்யர்மரணமடைந்தார்.

நவம்பர்:

நவ. 4: நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தும், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 3 முக்கிய அமைச்சர்களைபதவிகளைக் கைப்பற்றியும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார் இலங்கை அதிபர் சந்திரிகா.

நவ. 7: கந்து வட்டியை ஒழிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேறியது.

நவ. 8: இந்து நாளிதழ் ஆசிரியர் ரவி,முரசொலி ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட 6 பத்திரிக்கையாளர்களுக்குசிறைத் தண்டனை விதித்து சட்டசபை சபாநாயகர் காளிமுத்து அதிரடி உத்தரவு.

நவ. 10: இந்து மற்றும் முரசொலி பத்திக்கையாளர்களைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

ஆந்திர மாநில சட்டசபையை கலைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

நவ. 11: இலங்கையில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.

நவ. 12: லண்டனில் நடந்த பேஷன் ஷோவுக்கு சென்றபோது தன்னைக் கற்பழிக்க முயற்சி நடந்ததாக மாடல்அழகி மேதா விலாசினி பரபரப்பான புகார் தெரிவித்தார்.

நவ. 14: கோவில் யானைகளுக்கு முதுமலையில் ஒரு மாத கால புத்துணர்ச்சி முகாம் தொடங்கியது.

நவ. 16: வேலை நிறுத்தம் செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தலைமைச் செயலம் மற்றும் சென்னை மாவட்ட அரசுஊழியர்களை விசாரித்த 3 நீதிபதிகள் குழு 530 பேரை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்தும், மற்றவர்களை மீண்டும்பணியில் சேர்த்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டது.

மத்திய அமைச்சர் திலீப் சிங் ஜூதேவ் லஞ்சம் பெற்றதாக கூறி வீடியோ படத்தை வெளியிட்டு காங்கிரஸ் பரபரப்புபுகார்.

நவ. 17: அசாமில் பீகார் மாநிலத்தவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்தது. 40க்கும் மேற்பட்டவர்கள்கொலை செய்யப்பட்டனர்.

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிஜித் காலே மீது லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு புகார்கூறப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்பட்டார்.

நவ 20: சிறுவர்களிடம் ஓரினச் சேர்க்கை வைத்துக் கொண்டதாக எழுந்த புகான் பேரில் பிரபல பாப் பாடகர்மைக்கேல் ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.

நவ. 19: தர்மபுரி மாவட்டம் பிரிக்கப்பட்டு கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம்உதயம்.

நவ. 23: கருணாநிதியின் அக்காள் மகனும், மத்திய அமைச்சருமாக இருந்த முரசொலி மாறன் மரணம்.

நவ. 24: டான்சி வழக்கிலிருந்துஜெயலலிதாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும்ஜெயலலிதா தவறு செய்திருப்பது தெரிகிறது, அது சட்டப்பூர்வமாக நிரூபிக்கபடவில்லை, மனசாட்சிப் படிஜெயலலிதா நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

நவ. 27: சென்னை அருகே பொன்னேரியில் விஷச்சாராயத்திற்கு 16 பேர் பலி.

நவ. 29: தமிழகம் முழுவதிலும் அரசே நடத்தும் டாஸ்மாக் மதுக் கடைகள் விற்பனையைத் தொடங்கின.

டிசம்பர்:

டிச. 3: தமிழ் சினிமாவை கலக்கிய சிம்ரனுக்கும், தீபக் பங்காவுக்கும் மும்பையில் திருமணம் நடந்தது. தமிழ்திரையுலகைச் சேர்ந்த யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை சிம்ரன்.

டிச. 4: டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களில் டெல்லியைத்தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.

டிச. 6: பா.ஜ.க. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதாக கூறி சத்தீஸ்கர் முதல்வர் அஜீத்ஜோகி மீது பா.ஜ.க. பரபரப்பு புகார்.

டிச. 7: அந்தமானிலிருந்து வந்த கப்பலில் பயணம் செய்த இஸ்ரேல் நாட்டுப் பயணி படுகொலை செய்யப்பட்டார்.

டிச. 8: மத்திய பிரதேசத்தின் முதல் பெண் தல்வராக உமாபாரதியும், ராஜஸ்தானின் முதல் பெண் முதல்வராகவசுந்தரராஜே சிந்தியாவும் பதவியேற்றனர்.

டிச. 12: நாடாளுமன்ற பொடா திருத்த சட்ட விவாதத்தில் கலந்துகொள்ள வைகோவுக்கு அனுமதி மறுத்து சென்உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டிச. 13: ஈராக்கின் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய சதாம் உசேன் கைது செய்யப்பட்டார்.

டிச. 16 : ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் உதவியால், 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கிரிக்கெட் டெஸ்ட்வெற்றியை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இந்தியா பெற்றது.

பொடா சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டது.

டிச. 18: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை ஜாமீனில் விடுதலை செய்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிச. 19: நக்கீரன் கோபால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார்.

டிச. 20: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும்,மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக திமுகஅறிவித்தது.

டிச. 21: திமுக மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோர் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து ராஜினாமாகடிதங்களைக் கொடுத்தனர்.

டிச. 22: திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைய மடாதிபதிகாசி விஸ்வநாத பண்டார சன்னதிக்கு3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமனறம்தீர்ப்பளித்தது.

டிச. 26: ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்திற்கு 40,000 பேர் பலியானார்கள்.

டிச. 29: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுகவும் விலகுவதாக அறிவித்தது.

டிச. 30: மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி முயற்சியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இறங்கின.

டிச. 31: தேசிய அளவில் புதிய கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கியது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more