For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் அமைச்சரின் மகள் வழக்கிலிருந்து விடுவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் திமுக அமைச்சர்சமயநல்லூர் செல்வராஜின் மகள் சிந்தனைச் செல்வியை வழக்கிலிருந்து விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.

திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர் சமயநல்லூர் செல்வராஜ். பதவிக்காலத்தின்போது வருமானத்திற்குமீறிய வகையில் ரூ. 29.27 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் கூறி செல்வராஜ், அவரது மனைவு புஷ்பவள்ளி,மகள் சித்திரைச் செல்வி ஆகியோர் மீது மதுரை ஊழல் தடுப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது செல்வராஜின் இன்னொரு மகளான சிந்தனைச்செல்வியையும் குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் போலீஸார் சேர்த்தனர்.

சென்னை திருவான்மியூர் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டை சிந்தனைச் செல்விவாங்குவதற்குத் தேவையான பணத்தை சமயநல்லூர் செல்வராஜ்தான் கொடுத்தார் என்று போலீஸார் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந் நிலையில் இவ் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு சிந்தனைச் செல்வி மதுரை நீதிமன்றத்தில் மனுசெய்தார். ஆனால் அந்த மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சிந்தனைச் செல்வியின் அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், ஊழல் தடுப்புப் போலீஸார் மற்றும்மதுரை கீழ் நீதிமன்றம் ஆகியவற்றிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

திருவான்மியூரில் உள்ள பிளாட்டை வாங்குவதற்கு சிந்தனைச் செல்வியின் தந்தை பணம் கொடுத்ததாகப் போலீஸ்புகார் கூறுகிறது. ஆனால், ரூ. 5.40 லட்சம் பணத்தை வங்கிக் கடன் மூலமாகவும், ரூ. 3.65 பணத்தை புரோ நோட்டுஎழுதிக் கொடுத்து கடனாகவும் பெற்று அந்த பிளாட்டை வாங்கியதாக சிந்தனைச் செல்வி நிரூபித்துள்ளார்.

தனது கணவர் நல்ல வேலையில் உள்ள போதிலும் கூட அவரது சம்பளத்திலிருந்து ஒரு பைசா கூட எடுக்காமல்,சுயமாகவே அந்த பிளாட்டை வாங்கக் கூடிய அளவுக்கு அவரது வருமானம் உள்ளதை மனுதாரர் நிரூபித்துள்ளார்.

இது தெரிந்தும் கூட தங்களது வசதிக்காக இவற்றை மறைத்து, நீதிமன்றத்திலும் இந்தத் தகவலை தெரிவிக்காமல்,தேவையில்லாமல் மனுதாரரையும் வழக்கில் சேர்த்துள்ளனர் ஊழல் தடுப்புப் போலீஸார்.

இதன் மூலம் நீதியைத் தவறான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர். கீழ் நீதிமன்றங்கள் இது போன்றசந்தர்ப்பங்களில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும், யாருடைய ஊதுகுழலாகவும் செயல்படக் கூடாது என்றுகூறி சிந்தனைச் செல்வியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார் நீதிபதி அசோக்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X