ஜார்ஜ் பெர்னாண்டஸ் கார் விபத்து: லேசான காயத்துடன் உயிர் தப்பினார்
பிகார்ஷரிப்:
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பயணம் செய்த கார் நேற்றிரவு விபத்துக்குள்ளானது.அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
பிகார், நாளந்தா மாவட்டம் ஹில்சா என்ற இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்றிரவு பெர்னாண்டஸ் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்தபின் ராஜ்கிர் என்ற இடத்திற்கு டாடா குவாலிஸ் காரில் திரும்பினார். நாகர்னாஷாஎன்ற இடத்தை கார் நெருங்கியபோது, பனிமூட்டம் காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிமீது மோதியது.
இதில் லேசான காயங்களுடன் பெர்னாண்டஸ் உயிர் தப்பினார். பின்னர் அவர் ராஜ்கிர் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், லேசான காயங்கள்தான் ஏற்பட்டுள்ளன, தலை மற்றும் காலில்வலியிருப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக பெர்னாண்டஸூக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்தவிபத்தில் காரின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.


