For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் வந்தாச்சு: 7,000 தலித் பெண்களுக்கு நிலம் வழங்குகிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

7,000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு ரூ.70 கோடி மதிப்பில் நிலம் வழங்கும் திட்டத்தைசெயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம் என்று அழைக்கப்படும் இத் திட்டத்தின்மூலம், அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நிலம் வாங்குவதற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

நில அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மின் மோட்டார் வாங்குதல், பால்பண்ணை, கோழிப்பண்ணை, ஆடு, மாடுகள்வளர்த்தல் போன்ற வேளாண் உப தொழில்கள் தொடங்குதல் ஆகியவற்றுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.

இவ்வாறு ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படும் ரூ. 2 லட்சத்தில் 50 சதவீதம் மானியமாகவும், 50 சதவீதம்வங்கிக் கடனாகவும் வழங்கப்படும். இவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி முன்னுரிமை அடிப்படையில்விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

மேலும் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணத்தில் 75 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். அவர்கள்செலுத்த வேண்டிய 25 சதவீதக் கட்டணமும் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டு, கடனாக வழங்கப்படும்.

இத் திட்டத்தில் பயன்பெறுபவர்கள் 18 வயதிலிருந்து 55 வயதுக்குட்பட்ட, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினமகளிராக இருக்க வேண்டும். மகளிர் பெயரில் மட்டுமே நிலம் பதிவு செய்யப்படும். நிலமற்ற விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பனர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

பயனாளிகள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்தஉதவி அளிக்கப்படும். இத் திட்டத்தை தாட்கோ நிறுவனம் செயல்படுத்தும். இதற்கான விண்ணப்பங்கள் தாட்கோமாவட்ட மேலாளர் அலுவலகத்தில் வழங்கப்படும். பயனாளிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில்அமைக்கப்படும் குழு தேர்வு செய்யும்.

மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி தலித்களின் வாக்குகளைக் குறி வைத் இத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேச்சு நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X