For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தை சேர்ந்த ஜெ எப்படி தமிழகத்தை ஆளலாம்?: திமுக கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

விருதுநகரில் நடந்து வரும் திமுகவின் தென் மண்டல மாநாட்டின் இறுதி நாளான இன்று திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ள இந்த மாநாடு காரணமாகவிருதுநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கருணாநிதி இன்றுநிறைவுரை ஆற்ற உள்ளார். அப்போது திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அவர்வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.

மாநாட்டில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, தமிழ் இனத்தின் முதல் பகையே ஜெயலலிதா தான்.தமிழர்களின் முதல் எதிரியும் அவரே.

மத்தியில் பள்ளிகளில் மதத்தைப் புகுத்துவதற்கென்றே ஒரு அமைச்சரை (மனித வளத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி) வைத்துக் கொண்டு பா.ஜ.க. அட்டூழியம் செய்ய ஆரம்பித்தது. அதை கூட்டணியில் இருந்ததிமுக முடிந்தவரை தடுத்தது. பள்ளிகளிலும் அரசு விழக்களிலும் சரஸ்வதி வந்தனம் பாடச் சொன்னார்கள். அதைநாம் எதிர்த்தோம். இதனால் அவர்களுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு உருவானது.

சமஸ்கிருதத்தில் வந்தனம் பாடச் சொன்ன அவர்களிடம் தமிழுக்கு உயர் தனிச் செம்மொழி அந்தஸ்து கேட்டோம்.அந்த மனுவை குப்பையில் தூக்கிப் போட்டார்கள். இதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியதால் திமுகவைஒதுக்கினார்கள்.

பொடாவை வாபஸ் பெறுமாறு கருணாநிதி நெருக்கியதால் மறு ஆய்வுக் குழுவை அமைத்தார்கள். அந்தக் குழுவைசந்திக்க நான் அமைச்சர் என்ற முறையில் சென்றபோது, அந்தக் குழுவுக்கு மேஜை, நாற்காலி கூடஒதுக்கப்படாததை அறிந்து அதிர்ந்தேன். கிட்டத்தட்ட 7 மாதம் போராடிய பின்னரே அந்தக் குழுவுக்கு மேஜைகிடைத்தது.

வைகோவுக்கு எதிராக மத்திய அரசின் வழக்கறிஞரே உச்ச நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார்.இதைப் பார்த்ததும் டெல்லியில் இருந்த என்னை போனில் கூப்பிட்டு கருணாநிதி திட்டினார். அபிடவிட்டை வாபஸ்வாங்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரும்பி வா என்றார்.

அன்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டத்தில் கருணாநிதியின் கருத்தை உரத்த குரலில் எடுத்துச் சொன்னேன. திமுகஉங்கள் அடிமை அல்ல என்றேன். இதையடுத்து பிரதமர் தலையிட்டு இன்னொரு அபிடவிட் தாக்கல் செய்யச்சொன்னார். அது நடக்காமல் போயிருந்தால் வைகோவும் நெடுமாறனும் 10 வருடம் சிறையில்அடைக்கப்பட்டிருக்கும் நிலை உருவாகியிருக்கும்.

மத்தியில் பா.ஜ.கவையும் மாநிலத்தில் ஜெயலலிதாவை ஒடுக்க வேண்டியது தமிழனின் கடைமை என்றார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி பேசுகையில், குற்றவாளிக் கூண்டில் இருக்க வேண்டியஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது இந்த நாட்டின் தலைவிதி.

அவருக்கு பிரதராகும் கனவு வந்தது. அந்தக் கனவுக் கோட்டையை தவிடுபொடியாக்கியவர் வஞ்சிக்கோட்டைவாலிபர் கருணாநிதி. 40ம் நமதே நாடாளுமன்றமும் நமதே என்று வசனம் பேசிய ஜெயலலிதா, இப்போது தமிழ்நாட்டின் முதல்வராகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.

சோனியா வெளிநாட்டுக்காரராம். அவர் இந்தியப் பிரதமராகக் கூடாதாம். அப்படியென்றால் கர்நாடகத்தைச்சேர்ந்த ஜெயலலிதா எப்படி தமிழகத்தில் முதல்வராக இருக்கலாம்? அத்வானி கூட பாகிஸ்தானில் பிறந்தவர்தான்.அவர் எப்படி இந்தியப் பிரதமராகலாம். இந்தக் கேள்விகள் எல்லாம் மக்கள் மனதில் எழதா? என்றார்.

திமுக பொதுச் செயலாளர் போரசிரியர் அன்பழகன் பேசுகையில், வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம்வெல்வோம். ஆனால், அந்த மகிழ்ச்சியோடு திமுக தொண்டர்கள் தூங்கிவிடக் கூடாது. தூங்கிவிட்டால் வெற்றிவேறு பக்கம் போய்விடும். கடுமையாக உழைத்து வெற்றியைப் பறிக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X