For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி முத்திரைத் தாள் மோசடி: தமிழக சிபிசிஐடி அதிகாரிகளுக்கு லஞ்சம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழலாகக் கருதப்படும் சுமார் ரூ. 50,000 கோடி முத்திரைத் தாள் (ஸ்டாம்ப்பேப்பர்ஸ்) மோசடியில் தமிழகத்தைச் சேர்ந்த சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாகக்கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரித்து வந்த டி.எஸ்.பி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர், மும்பையை மையமாக வைத்து அப்துல்கரீம் தெல்கி என்பவன் நடத்திய இந்த முத்திரைத் தாள்மோசடியில் தொடர்புடைய மகாராஷ்டிர துணை முதல்வர் சகன் புஜ்பால், மும்பை போலீஸ் கமிஷ்னர் எப்.சி. ஷர்மா,கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க் ஆகியோர் பதவி இழந்தனர். கர்நாடக அமைச்சரின் தம்பி சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

ரூ. 50,000 கோடி அளவுக்கு நடந்துள்ளதாகக் கருதப்படும் நாட்டின் மாபெரும் மோசடியில் தமிழத்திலும்பலருக்குத் தொடர்புள்ளது. ஆனால், அது குறித்து நியாயமாக விசாரிக்க ஆரம்பித்த அதிகாரி திடீரெனஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற தமிழகத்தைச் சேர்ந்த சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளானடி.ஜி.பி. ரமணி, அமித் வர்மா, டி.ஐ.ஜி. முகமது அலி (திமுக தலைவர் கருணாநிதி கைதில் முக்கிய பங்கு வகித்தவர்)ஆகியோருக்கு ரூ. 40 லட்சம் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த முத்திரைத் தாள் மோசடியில்தொடர்பிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழகத்திலும் போலி முத்திரைத் தாள் கும்பல் ஊடுருவி இருப்பதை வணிக வரித்துறைதான் முதலில் கண்டறிந்தது.அது குறித்து க்யூ பிராஞ்ச் போலீசாருக்கும் வணிக வரித்துறை தகவல் தந்தது. ஆனால், உடனடியாக தீவிரவிசாரணையை தமிழக க்யூ பிராஞ்ச் போலீசார் நடத்தவில்லை.

ஓராண்டுக்குப் பின் மீண்டும் வணிக வரித்துறை நெருக்குதல் தரவே அப்போது க்யூ பிராஞ்ச் டி.ஜி.பியாக இருந்தரமணி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய க்யூ பிராஞ்ச் இந்த போலி முத்திரரைத்தாள் மோசடியில் தொடர்புடைய நிஜாமுதீன் என்பவரைப் பிடித்தனர்.

ஆனால், அவரை முறைப்படி கைது செய்யவில்லை. இதற்கு சிபிசிஐடி அதிகாரியான முகமது அலியே காரணம்என்று கூறப்படுகிறது. நிஜாமுதீனைக் காப்பாற்ற அவர் முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் நிஜாமுதீனைமுறைப்படி கைது செய்து சிறையில் அடைக்காமல் அதிகாரிகள் இன்பார்மலாகவே தங்களது கஸ்டடியில் வைத்துவிசாரித்து வந்துள்ளனர்.

இதற்காக டிஜிபி ரமணிக்கு மட்டும் ரூ. 7.5 லட்சம் லஞ்சமாகத் தரப்பட்டதாகவும், இதை முகமது அலியின் மகனேஅவரிடம் நேரில் போய் தந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிஜாமுதீனை அதிகாரிகள்தப்பவிட்டதாகவும் தெரிகிறது.

ஆனால், மத்திய உளவுப் பிரிவுகளின் நெருக்குதலால் நிஜாமுதீனை மீண்டும் தமிழக போலீசார் கைதுசெய்ததாகவும், ஆனால், விசாரணையை வேண்டுமென்றே தாமதமாக நடத்தி, முறையாக குற்றங்களையும் பதிவுசெய்யாமல் அவருக்கு ஜாமீன் கிடைக்க வழி வகை செய்துள்ளனர்.

மீண்டும் போலி முத்திரைத் தாள்கள் வியாபாரத்தில் நிஜாமுதீன் தீவிரமாக இருக்க 2002ம் ஆண்டு மே மாதம்சென்னை எல்.ஐ.சி. கட்டடம் அருகே வைத்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவரது இடத்தில் போலீசார் சோதனையிட்டபோது பல கோடி மதிப்புள்ள போலி முத்திரைத் தாள்கள்பிடிபட்டன. அதை போலீசார் கைப்பற்றியதாகவும், பின்னர் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவுவந்ததையடுத்து அந்த போலி முத்திரைத் தாள்களை மீண்டும் நிஜாமுதீனிடமே தந்துவிட்டு போலீசார் விலகிக்கொண்டதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் தான் கர்நாடகத்தில் இந்த போலி முத்திரைத் தாள் விவகாரம் வெடித்தது. அம் மாநில போலீசார்விசாரணையில் இறங்கியபோது அப்போது தமிழகத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் குறித்து அவர்களுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து தமிழகம் வந்த கர்நாடக போலீஸ் படை நிஜாமுதீனையும் மேலும் இரண்டு பேரையும் அமுக்கியது.நிஜாமுதீனின் வீட்டை கர்நாடக போலீசார் சோதனையிட்டபோது ரூ. 250 கோடி அளவுக்கு போலி முத்திரைத்தாள்கள் சிக்கின.

இவர்களை கர்நாடக போலீசார் அடித்து, உதைத்து விசாரித்தபோது பல உண்மைகளைப் புட்டுப் புட்டுவைத்துள்ளனர். தாங்கள் ஏற்கனவே தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டதையும், ஆனால் டி.ஜி.பி. ரமணி,முகமது அலி போன்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பி வந்தததையும் தெரிவித்துள்ளனர்.

நிஜாமுதீனின் குடும்பத்தினரை மிரட்டி முகமது அலி அவ்வப்போது பல லட்சங்களை சுருட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் இந்த மோசடியில் தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து நேர்மையாகவிசாரித்து வந்த சிபிசிஐடி டி.எஸ்.பியான செல்வராஜ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை நீலகிரிமாவட்டம் கூடலூர் வனப் பகுதிக்கு தூக்கி அடித்துள்ளனர். இதிலும் அதிகாரிகளின் கை இருப்பதாகத் தெரிகிறது.

இந்த விவரங்களோடு வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல்செய்துள்ளார். இதனால் அவருக்கு போலீசாரிடம் இருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்தும் நீதிமன்றத்தில் புகார் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் போலீஸ் அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ள இந்த மோசடி அரசுக்கு பெரும் களங்கத்தைஏற்படுத்தலாம் என்று கூறப்படுவதால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்படுகிறது.

போலி முத்திரைத் தாள் மோசடி விவகாரம் குறித்து அரசுக்க உரிய முறையில் தகவலைத் தராமல் இருந்தவிஜிலென்ஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு இதுவரை எந்தப்பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X