For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரிக் கலவரம்: தமிழர்- கன்னடர்களுக்கு ரூ. 2.34 கோடி நஷ்டஈடு- தமிழக, கர்நாடக அரசுகள் தர உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

1991ம் ஆண்டு பங்காரப்பா முதல்வராக இருந்தபோது கர்நாடகத்தில் நடந்த காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டதமிழர்கள் உள்ளிட்ட சுமார் 10,000 பேருக்கு 6 மாதத்துக்குள் ரூ. 2.34 கோடி இழப்பீட்டை வழங்க கர்நாடகஅரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட 9,576 தமிழர்களுக்கு கர்நாடக அரசு ரூ. 2,04,93,300ம், தமிழகத்தில் பாதிக்கப்பட்ட93 கன்னடர்களுக்கு தமிழக அரசு ரூ. 29,77,500ம் நஷ்டஈடாக வழஙக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்துக்கு தணணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதைஎதிர்த்து முதல்வராக இருந்த பங்காரப்பாவே பந்துக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து தமிழர்களுக்கு எதிராககர்நாடகம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது.

இந்தக் கலவரத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஸ்டைலில் கட்டுப்படுத்தினார் அப்போதைய முதல்வர்பங்காரப்பா. கலவரத்தை அவரே தூண்டிவிட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் லட்சக்கணக்கானதமிழர்களும் பல அப்பாவி கன்னடர்களும் பாதிக்கப்பட்டனர்.

பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன, உடமைகளை அவர்கள் இழந்தனர். லட்சக்கணக்கானதமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறினர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

தமிழர்களின் ரூ. 300 கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலானஅப்போதைய தமிழக அரசு கூறியது.

கர்நாடகத் தமிழர்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள் காரணமாக, காவிரிக் கலவரத்தால்பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி 1999ம் ஆண்டு காவிரி கலவரஇழப்பீட்டு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள்நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆணையத்திடம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 9,669 பேர் மட்டுமே புகார் கொடுத்தனர். இதில்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழக எல்லைப் பகுதியில் வசித்த கன்னடர்களும் அடங்குவர்.

மொத்தம் ரூ. 300 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக இந்த 9,669 பேரும் கூறியிருந்தனர். ஆனால், கர்நாடகஅரசோ ரூ. 47.28 கோடி மட்டுமே நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறியது.

கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையை நடத்திய இந்த ஆணையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.34 கோடிமட்டும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தவழக்கை நீதிபதிகள் ராஜேந்திரபாபு, லட்சுமணன், மாத்தூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கணேஷ், பாதிக்கப்பட்டவர்களின் பல்வேறு மனுக்களைஇந்த ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் அவர்கள் அடைந்த பெரும் நஷ்டத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சுமார் 10,000 பேருக்கும் சேர்த்து வெறும் ரூ. 2.34 கோடியை மட்டுமே நஷ்டஈடாக இந்தஆணையம் அறிவித்துள்ளது என்றார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், காவிரிக் கலவர இழப்பீட்டு ஆணையம் மிகச் சிறப்பாகபணியாற்றியுள்ளது. இந்த ஆணையத்தின் முன் சமர்பிக்கப்பட்ட ஒவ்வொரு மனுவையும் எங்களால் ஆராயமுடியாது. ஆணையம் சிறப்பான விசாரணையை நடத்தித் தான் இந்த நஷ்டஈட்டை அறிவித்துள்ளது.

இதனால் இந்த நஷ்டஈட்டு விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இழப்பீட்டு ஆணையம்குறிப்பிட்டபடி கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட 9,576 தமிழர்களுக்கு கர்நாடக அரசு ரூ. 2,04,93,300ம், தமிழகத்தில்பாதிக்கப்பட்ட 93 கன்னடர்களுக்கு தமிழக அரசு ரூ. 29,77,500ம் நஷ்டஈடாக வழஙக வேண்டும் (மொத்தம் 9,669பேர், நஷ்டஈடு ரூ. 2,34,70,800)

இந்த நஷ்டஈட்டை 6 மாதத்துக்குள் கர்நாடக அரசும், தமிழக அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

கலவர புகழ் பங்காரப்பா இப்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகசட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வென்றால் அவரே முதல்வர் என்று கூறப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X