For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்முறையில் இறங்கினால்.. திருப்பி தாக்குவோம்: அதிமுகவுக்கு திமுக, மதிமுக எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களைத் திருப்பித் தாக்குவோம் எனதிமுக, மதிமுக கட்சிகள் அறிவித்துள்ளன.

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்தபொதுக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவதற்கான களம்தான் இந்தத்தேர்தல்.

தென் சென்னை தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் டி.ஆர்.பாலு ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாகஇருந்தவர்.

ராணி மேரிக் கல்லூரியை இடிக்கவும், அண்ணா பல்கலைக கழகத்தை நாசமாக்கவும் ஜெயலலிதா முயன்றபோதுதனது மத்திய அமைச்சர் பதவியால் அதை தடுத்து நிறுத்திய கருணாநிதியின் சிங்கக்குட்டி அவர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் அதிமுகவினர் ரூ.10 கோடி செலவழிக்கப் போகிறார்களாம். வாக்குச் சாவடிகளைக்கைப்பற்றப் போகிறார்களாம். அச்சமயம் எங்கள் கைகளை பூப்பறிக்க போகாது. தாக்க வந்தால் திருப்பித்தாக்குங்கள். அடக்கு முறை வந்தால் அதே முறையில் சந்தியுங்கள். உயிரை விட ஜனநாயகம் உயர்ந்தது என்றார்.

திமுகவும் எச்சரிக்கை:

பாலுவுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த இன்னொரு கூட்டத்தில் பேசிய சென்னையின் முக்கிய திமுகஎம்.எல்.ஏவான ஜெ. அன்பழகன்,

அதிமுகவினர் பழைய கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தாக்குவது, மிரட்டுவது போன்ற வேலைகளில்நீங்கள் இறங்கினால் போன தேர்தலில் நீங்கள் ஆடிய ஆட்டத்துக்கும் சேர்த்து பாக்கியுடன் திருப்பித் தருவோம்.

சென்னையில் ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்கிய அதே இடத்தில் திமுக தலைவர் கருணாநிதியும்பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார். இதற்கு போலீசார் இன்னும் அனுமதி தரவில்லை. போலீசார் தடை விதித்தால்அதை மீறுவது என்ற முடிவில் இருக்கிறோம். முடிந்தால் போலீசும் அதிமுகவினரும் தடுத்துப் பார்க்கலாம்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் உயிரைக் கொடுத்தாவது வெற்றி பெறுவோம் என்றார்.

அவரைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் பேசுகையில், சோனியாவை வெளிநாட்டவர்என்று கர்நாடக மாநிலத்திலிருந்து வந்திருக்கும் ஜெயலலிதா எப்படி கூறலாம்?. கத்துக் குட்டி என்று சோனியாவைக்கூறும் ஜெயலலிதாவை நாங்கள் யானைக் குட்டி என்று கூறக்கூடாதா?

பெண் என்று நம்பிதான் தமிழக மக்கள் இவருக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர் பெண்ணாகவும் இல்லை,ஆணாகவும் இல்லை என்றார்.

திமுகவுக்கு தாவிய மன்சூர்

இதற்கிடையே தேர்தலுக்குத் தேர்தல் கட்சி தாவி, தானாகவே வலிய போய் ஆதரவு தரும் வில்லன் நடிகர் மன்சூர்அலிகான் அப்போது அதிமுகவிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு ஆதரவாகபிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

வெங்கடேச பண்ணையாரை சுட்டுக் கொன்று அவரது மனைவியின் தாலியைப் பறித்ததைத் தவிர ஜெயலலிதாஅரசு வேறு எதையும் செய்யவில்லை. நான் இப்படி பேசுவதால் என் வீட்டில் போலீஸை விட்டு கஞ்சா வைத்தாலும்வைப்பார்கள். சுட்டுக் கூட தள்ளுவார்கள். எது வேண்டுமானாலும் செய்யட்டும். அதிமுகவுக்கு எதிராக தெருத்தெருவாய் பிரச்சாரம் செய்வேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X