For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களைக் குழப்பும் ரஜினி !!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அமைதியாக இருந்து கொண்டிருக்கும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பதில் தினசரி வெளியாகும் தகவல்களால்தமிழக மக்கள் கடுமையான குழப்பத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

தமிழகத்தில் ஏதாவது தேர்தல் வந்துவிட்டால் உடனே ரஜினி "வாய்ஸ்" யாருக்கு என்ற பேச்சு எழுந்து விடும். ஒரேஒரு முறை அவரது பேச்சுக்கு மக்களிடம் மரியாதை இருந்தது. ஆனால் அடுத்த தேர்தலில் அது அடிபட்டு விட்டது.

அவரது பேச்சுக்கு மக்கள் காது கொக்கவில்லை. அதிலிருந்தே யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ அறிக்கைகொடுக்காமல் தேர்தல் நேரத்தில் தமிழகத்தை விட்டே வெளியே சென்றுவிட ஆரம்பித்தார் ரஜினி.

ஆனால் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்ட நிலையில் மறுபடியும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்றபேச்சு உயிர் பெற்றுள்ளது. ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பாக தினசரி வெளியாகும் "கதைகளால்"மக்கள் ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறார்கள். குறிப்பாக வாரப் பத்திக்கைகளில் ஒவ்வொரு வாரம் ஒருஸ்டோரி வெளியாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், உங்களுக்கு ரஜினி ஆதரவுஉள்ளதா என்று கேட்டபோது, அவர் எங்களை எதிர்க்கவில்லை என்று கூறினார். இதனால் திமுகவுக்கு ரஜினிஆதரவு என்றார்கள்.

பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீனில் விடுதலை ஆன பிறகு அவருக்கு போன் செய்து வாழ்த்துத்தெரிவித்தார் ரஜினி. இதை பத்திரிக்கைகளுக்குச் செய்தியாகக் கொடுத்தார் வைகோ. இதையடுத்து வைகோவுக்குரஜினி ஆதரவாக இருப்பது போல கூறப்பட்டது.

ஆனால் இததனால் ரஜினி கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. வைகோவிடம் சாதாரணமாக பேசியதைஅவர்கள் எப்படி பத்திரிக்கைகளுக்குத் தெரிவிக்கலாம் என்று ரஜினி கூறியதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து வைகோவையும் ரஜினி தேர்தலில் ஆதரிக்கவில்லையா என்ற குழப்பம் பிறந்தது.

இதெற்கெல்லாம் மேலாக பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்களைத் தோற்கடிக்கதலைவர் ஆணையிட்டுவிட்டார் என்று ரஜியின் ஆத்ம நண்பரும், ரசிகர் மன்றத் தலைவருமான சத்ய நாராயணாவிழுப்புரத்தில் வைத்து ரசிகர்களிடையே அறிவித்தார். இதனால் திமுக கூட்டணிக்கு எதிராக ரஜினி கிளம்பிவிட்டாரோ என்ற குழப்பம் மக்களிடையே மறுபடியும் உதித்தது.

இப்போது உச்சகட்டமாக தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பு.தா. இளங்கோவன் (பா.ம.கவில்சீட் கிடைக்காமல் பா.ஜ.கவுக்குத் தாவியவர்) அளித்த பேட்டியில், ரஜினி தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும்,தர்மபுரியில் பா.ஜ.க. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கூறியிருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவுக்குத்தனது ஆதரவை ரஜினி தெரிவித்துள்ளதாகவும் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

இதேபோல, வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜனும், சத்ய நாராயணாவை தான் சந்தித்துப் பேசியதாகவும்,தங்களுக்கு ஆதரவாக ரஜினி இருப்பதாக சத்ய நாராயணா தெரிவித்ததாகவும் கூறியுள்ளது, குழப்பத்தை மேலும்பெரிதாக்கவே உதவியுள்ளது.

அதேசமயம், டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி சனிக்கிழமை கூறுகையில், எனது தந்தை மீது ரஜினி நல்லமதிப்பு வைத்துள்ளார். அதேபோல, ரஜினி மீது டாக்டர் ராமதாஸும் நல்ல மரியாதை வைத்துள்ளார். எனவேபா.ம.கவுக்கு எதிராக செயல் பட மாட்டேன் என்று ரஜினி உறுதி கூறியுள்ளார் என்று மேலும் குழப்பத்தைஅதிகப்படுத்தியுள்ளார்.

இந் நிலையில் பு.தா. இளங்கோவன் தானாகவே வலிய வந்து தான் ரஜினியுடன் தொலைபேசியில் பேசினார்.அப்போது தனக்கு தர்மபுரி சீட் கொடுக்கப்பட்டதைச் சொன்னார், இதையடுத்து ரஜினி அவருக்கு வாழ்த்துச்சொன்னார், அவ்வளவு தான் என ரஜினி வீட்டில் இருந்து தகவல் கசியவிடப்பட்டுள்ளது.

பா.ஜ.கவுக்கு இளங்கோவன் ஆதரவு கேட்டபோது, ரசிகர்கள் மனதை பா.ம.க. புண்படுத்தியுள்ளதால் அவர்கள்போட்டியிடும் தொகுதிகளில் ரசிகர்களே தக்க முடிவெடுப்பார்கள் என்று மட்டும் ரஜினி கூறியதாக அவரதுவீட்டைத் தொடர்பு கொண்ட ஒரு நிருபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நாசே. ராமச்சந்திரன், எங்களுக்குஆதரவு என்று ரஜினி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் பு.தா. இளங்கோவன் மூலமாகஅவரை பிரச்சாரத்துக்கு அழைக்க முயல்வோம் என்று புதிதாய் குட்டையைக் குழப்பினார்.

மொத்தத்தில் ரஜினி வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னதாக மற்றவர்கள் தான் நாளுக்குஒரு செய்தியை வெளியிட்டு வருகின்றனர். இருந்தாலும் அவர் தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தெளிவுபடுத்தும்முயற்சியும் நடக்கவில்லை.

ரஜினி ரசிகர்களும் தங்களது தலைவரின் "வெளிப்படையான, தெளிவான" நிலையைப் பார்த்து கலங்கிப்போயுள்ளனர். இப்படியே இவர் இருந்தால் நாம் செல்லாக்காசாகி விடுவோம், அடுத்தவர்களின் பார்வையில்கேலிப் பொருளாகி விடுவோம் என்ற குமுறலையும் அவர்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால்தங்களது பகுதியின் முக்கியக் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டனர்.

1996ம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்க உதவிய ரஜினிஅலை இப்போது பெரும் கேள்விக்குறியதாக மாறியுள்ளது. அவருக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவுஇருக்கிறது என்று தெரியவில்லை.

இதற்கிடையே, எத்தனையோ வேலைகள் இருக்கும்போது, ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற "அதி முக்கியமான"பிரச்சனையில் தேவையில்லாமல் தலையைக் கொடுக்கும் நிலைக்குத் தமிழக மக்களைை சில பத்திரிக்கைகள் தான்திட்டமிட்டு தள்ளி விட்டு வருகின்றன என்பது மட்டும் நிச்சயமான உண்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X