For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியகுளம் காங். வேட்பாளர் மீது 6 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

பெரியகுளம் & சென்னை:

சசிகலாவின் அக்காள் மகன் தினகரனை எதிர்த்துப் போட்டியிடும் பெரியகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்ஜே.எம்.ஹாரூண் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி தமிழக போலீசார் 6 வழக்குகளை பதிவுசெய்துள்ளனர். 6 காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் பொருள்களை இறக்குமதி செய்து தமிழகத்தில் விற்கும் பிரபலமானவியாபாரி ஹாரூண். ஏகத்துக்கும் சொத்துக்கள் கொண்டவர். அதிமுக- தினகரனின் பண பலத்துக்கு ஈடு கொடுக்கும்அளவுக்கு பண பலம் கொண்டவர்.

பெரியகுளத்தில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் வசிப்பதால் இவரை களமிறக்கியது காங்கிரஸ்.

தேர்தல் பிரசாரத்திற்காக தேனிக்குச் சென்றபோது, பெரியகுளம்- வத்தலகுண்டு சாலையில் உள்ள மலைச்சாலையில் ஹாரூணுக்கு மிக பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தொண்டர்கள், ஏகப்பட்ட வாகனங்களில் வந்திருந்து வரவேற்பளித்தனர். காங்கிரஸ் தவிர திமுக மற்றும்கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் ஏகப்பட்ட பேர் வந்திருந்தனர். வந்து இறங்கிவுடன் கூட்டணிக்கட்சியினருக்கு பணத்தை வாரி இறைத்தார் ஹாரூண். இதனால் இவர் பின்னால் எப்போதும் பெரும் கூட்டம்.

தினகரனை விட அதிகமாக கார்கள், ஆட்களுடன் தொகுதிக்குள் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். இது அதிமுகமற்றும் சசி அண்ட் கோவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது.

பின்னர் ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றார். அங்கு சாமிகும்பிட்டு விட்டு பிரசாரத்தைத் தொடங்கினார். போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்மம், பெரியகுளம்,தேனி, கூடலூர் வரை அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

அவருடன் 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன. இவை அனைத்தும் தேர்தல் நடத்தைவிதி மீறல் என்று போலீஸார் ஹாரூண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 6 காவல் நிலையங்களில்ஹாரூண் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஹாரூண், மாவட்ட திமுக செயலாளர் மூக்கையா, காங்கிரஸ் செயலாளர் கே.எஸ்.எம்.ராமச்சந்திரன், மதிமுகசெயலாளர் ராமகிருஷ்ணன், பாமக செயலாளர் மாணிக்கம் ஆகியோர் உள்ளிட்ட மொத்தம் 2,000 பேர் மீதுவழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நடவடிக்கை குறித்து ஹாரூண் கருத்து தெரிவிக்கையில், ஆளுங்கட்சியின் உத்தரவுப்படி போலீஸார் இந்தஅடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் மட்டுமே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கமுடியும். இதை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றார்.

வாசன் பிரசார தொடக்கம்:

இந் நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் நெல்லை தவிர மற்ற தொகுதிகளின்வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. நெல்லை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இந் நிலையில் இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜி.கே.வாசன். இன்று மாலை சென்னைஅருகே உள்ள மாங்காடு பகுதியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார் வாசன். பின்னர் பூந்தமல்லியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இரவு 8 மணிக்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணா தெருவில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில்உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். மத்தியசென்னை, வட சென்னை, தென் சென்னை திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தில் வாசன் வாக்குசேகரிக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X