For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகாரிகள் மூலம் ரஜினி ரசிகர்களுக்கு அதிமுக பண பட்டுவாடா: ராமதாஸ் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தனது கட்சியைத் தோற்கடிப்பதற்காக ரஜினி ரசிகர்களுக்கு அதிகாரிகள் மூலமாக அதிமுக பணபட்டுவாடா செய்து வருவதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

சேலத்தில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் எங்களைத் தோற்கடிக்க ஆளும் கட்சி ஏகப்பட்ட பணத்தைஇறக்கிவிட்டு வருகிறது. ஆளும் கட்சியுடன் புதிதாக உறவு கொண்டுள்ள, காயந்து கிடக்கும்அவர்களுக்கு (ரஜினி ரசிகர்கள்) அதிகாரிகள் மூலமாகவே பண வினியோகம் நடந்து வருகிறது.

இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் கொடுப்போம்.

இதுவரை 29 தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டேன். எல்லா இடங்களிலும் குறைந்தபட்சம் 1லட்சம் வாக்கு வித்தியாசத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் நிலை நிலவுகிறது.

போகும் இடமெல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிரான மக்கள் அலை கடுமையாக இருப்பதை உணரமுடிகிறது. தண்ணீர் கொடுக்காமல் தொகுதிக்குள் வரக் கூடாது என அதிமுக-பா.ஜ.கவேட்பாளர்களை மக்கள் விரட்டும் அளவுக்கு நிலைமை உள்ளது.

தமிழ்நாடு, புதுவை ஆகிய இரு மாநிலங்களிலும் 100 சதவீத வெற்றியைப் பெற்று சாதனைபடைக்கப் போகிறோம். இது ஒரு வரலாற்றுச் சாதனையாக இருக்கப் போகிறது.

மதவெறி, ஜாதி வெறிக்க ஏகப் பிரதிநிதியே பா.ஜ.கதான். வன்முறையாளர்கள் என்றாலே அதுபா.ஜ.கவைத் தான் குறிக்கும். ஆரிய சமாஜமாக தோன்றி, இந்து மகா சபையாகி, ஆர்.எஸ்.எஸ். எனமாறி, ஜன சங்கமாகி, விஎச்பி, பஜ்ரங் தள் என கிளைவிட்டு இப்போது பா.ஜ.கவாக அவதாரம்எடுத்துள்ள மதவெறி, சாதி வெறிக் கும்பல் அவர்கள் தான்.

நாடெங்கும் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தி, ரத்தவாடையில் வளரும் கட்சி பா.ஜ.க தான்.இந்தக் கலவரத்துக்கு உச்சமாக நடந்தது தான் குஜராத் கலவரம். 2,000 பேர் கொலைசெய்யப்பட்டனர். 2,500 பேரைக் காணவில்லை. இதற்காக பா.ஜ.க. வெட்கப்படவில்லை.பெருமைப்படுகிறது.

அம் மாநிலத்தில் சிறுபான்மையினர் மீது எந்த அளவுக்கு கொடுமை நடந்தது என்பதை உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறிவிட்டது.

பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை வேடிக்கை பார்த்த நரேந்திர மோடி நவீன நீரோமன்னனா என்று கேள்வி எழுப்பியதோடு, அவருக்கு கருணையே இல்லையா என்றும் கேட்டுள்ளதுநீதிமன்றம்.

நரோடாபாட்டியா என்ற இடத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வன்முறைவெறியர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை என்னும் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது இந்தியா. நிச்சயமாக ஒளிரவில்லை.

அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதும், கல்வி-வேலைவாய்ப்பில் சலுகைகோரி போடுவதும், சமூகத்தில் சம அந்தஸ்துக்காக போராடுவதும், அதற்காக குரல் கொடுப்பதும்சிலருக்கு ஜாதி வெறியாகத் தெரிகிறது என்றார் ராமதாஸ்.

அவரிடம் ரஜினி குறித்து கேள்விகளை எழுப்பியபோது நேரடியாக பதில் சொல்லாத ராமதாஸ்,அதை (ரஜினியின் சவாலை) நாங்கள் சமாளித்துக் காட்டுவோம் என்று மட்டும் கூறிவிட்டுச்சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X