For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திரகுமாரி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 5 பேர்மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜூலை மாதம்21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று 5 பேருக்கும் சென்னை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலவச வேஷ்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாகதொடரப்பட்ட வழக்குகளில் இந்திரகுமாரி உட்பட அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலைசெய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்திரகுமாரி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1997ம் ஆண்டு சமூக நலத்துறையின்செயலாளராக இருந்த இப்போதைய தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில்இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு,இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி குற்றப்பத்திரிக்கையைசி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இவர்கள் ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக ஏற்படுத்திமெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளையும் பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி,அரசிடம் பணம் பெற்றனர்.

காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45லட்சம் மோசடி செய்துள்ளனர். இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களை தவறாகபயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர்.

இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்களைஅனைவரையும் இந்திய தண்டனைச்சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும்என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி எம்.ஜெயபால், இந்த வழக்கு விசாரணைக்காகஇந்திரகுமாரி உட்பட 5 பேரும் ஜூலை மாதம் 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X