For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை ஒளிர வைப்போம்- ப.சிதம்பரம்: பொடா ரத்தாகும்- அமைச்சர்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பொடா சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் அல்லது அதில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படும் எனபுதிய சட்ட அமைச்சரான எச்.ஆர். பரத்வாஜ் அறிவித்துள்ளார்.

அதே போல பொடா தேவையில்லாத ஒரு சட்டம் என உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற சிவராஜ் பாட்டீல்கூறினார்.

இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் நிருபர்களிடம் பேசிய பரத்வாஜ்,

பொடா சட்டம் குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் பேசுவேன். அந்தச் சட்டம் ஒட்டுமொத்தமாகதிரும்பப் பெறப்படும், அல்லது அதில் அந்த சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அதில்பெரிய அளவில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பாட்டீல் நிருபர்களிடம் பேசுகையில், பொடா ஒரு தேவையானசட்டமாக நாங்கள் கருதவில்லை. அதன் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து விரைவில் உரிய முடிவுஎடுக்கப்படும் என்றார்.

இந்தியாவை ஒளிர வைப்பேன்- சிதம்பரம்:

P.Cநிதியமைச்சராகப் பொறுப்பேற்ற ப.சிதம்பரம் கூறுகையில்,

நல்ல பொருளாதாரக் கொள்கை, சிறப்பான அரசியல் செயல்பாடு, கடுமையான உழைப்பு மூலம் இந்தியாவைஉண்மையிலேயே ஒளிர வைப்போம். முந்தைய அரசு இந்தியா ஒளிர்வதாகக் கதைவிட்டது.

அனைத்து இந்தியனுக்கும் இந்தியா ஒளிர வேண்டும். ஏழைக்கும் இந்தியா ஒளிர வேண்டும். அதற்கானநடவடிக்கை எடுப்போம்.

விவசாயத்துறையிலும் உற்பத்தித் துறையிலும் முதலீட்டை அதிகப்படுத்தி வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும்என்றார்.

பெட்ரோல் விலை: பேசி முடிவு

பெட்ரோலிய அமைச்சராகப் பொறுப்பேற்ற மணிசங்கர அய்யர் பேசுகையில், குரூட் விலை உலகளவில் பெரும்அளவில் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஆனால், அதிகாரிகளிடம் பேசி எந்த அளவுக்கு அதை, யாருக்கும் பாதிக்காத வகையில் செய்ய முடியுமோ அதைச்செய்வேன் என்றார்.

இளங்கோவனும் பொறுப்பேற்பு:

மணிசங்கர அய்யரின் பெட்ரோலியத்துறையில் இணையமைச்சராக இளங்கோவனும் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

லாலுவின் ப்ரீ பாஸ்:

இந் நிலையில் இன்று ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்ற லாலுபிரசாத் யாதவ், சுதந்திரப் போராட்ட தியாகிகள்,வயதானவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு ரயில் பாஸ் தரப்படும் என்று அறிவித்தார்.

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவேன். அதே போல ரயில்கள் நேரம் தவறாமல் வந்து,செல்ல நடவடிக்கை எடுப்பேன். ரயில்கள் அநியாயத்துக்கு காலதாமதமாக இயங்கினால், அதற்குப் பொறுப்பானஅதிகாரி மீது நடவடிக்கை பாயும் என்றார்.

ரயில் தான் வேண்டும்: பாஸ்வான்

மத்திய இரும்புத்துறை அமைச்சராகப் பதவியேற்ற ராம்விலாஸ் பாஸ்வான் மகிழ்ச்சியாக இல்லை. சோர்ந்து போனமுகத்துடன் நிருபர்களிடம் பேசிய அவர், ரயில்வே துறையை எனக்கு ஒதுக்காததால் பீகார் மக்கள் கோபத்தில்உள்ளனர். இரும்புத்துறையுடன் என் மாநில மக்களுக்கு தொடர்பே இல்லை என்றார்.

பாகிஸ்தானுடன் நல்லுறவு: நட்வர் சிங்

வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நட்வர் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,

பாகிஸ்தானுடனான அனைத்து கருத்து வேறுபாடுகளையும் களைய முற்படுவேன். அந் நாட்டுடன் நல்லுறவுக்கும்,தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சிக்கப்படும். அமெரிக்க-இந்திய உறவு மேலும் வலுப்படுத்தப்படும்என்றார்.

அதே போல பாதுகாப்பு அமைச்சராக பிரனாப் முகர்ஜி, வர்த்தகத்துறை அமைச்சராக கமல்நாத், நாடாளுமன்றவிவகாரத்துறை அமைச்சராக குலாம் நபி ஆசாத், விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக பிரபுல்படேல் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X