For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்மோகன் ராவ் மாற்றப்படுகிறார்: தமிழக ஆளுநராகிறார் பர்னாலா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக ஆளுநராக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜனார்தன ரெட்டி அல்லது ஆந்திர மாநில ஆளுநர்சுர்ஜித் சிங் பர்னாலா நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்த ரெட்டி, தமிழக ஆளுநர் பதவியைக் குறி வைத்துதிமுக தலைவர் கருணாநிதி மூலமாக காய் நகர்த்தி வருகிறார்.

மத்திய அமைச்சரவையில் திமுக கேட்ட துறைகளை ஒதுக்குவதில் காங்கிரஸ் மேலிடத்திடம்திமுகவுக்கு ஆதரவாகப் பேசியவர் ரெட்டி. மேலும் கப்பல்துறை அமைச்சரான தெலுங்கானாராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவிடம் பேசி திமுகவுக்காக அந்தத் துறையை விட்டுக்கொடுக்க வைத்தார்.

இதனால் ரெட்டியை கவர்னராக ஏற்பதில் திமுகவுக்கு சங்கடம் இருக்காது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் தனது நெருங்கிய நண்பரான சுர்ஜித் சிங் பர்னாலாவை கவர்னராக்க கருணாநிதிவிரும்புவதாகத் தெரிகிறது. இப்போது ஆந்திர கவர்னராக உள்ள பர்னாலா, 1989ல் திமுகஆட்சியில் இருந்தபோது தமிழக கவர்னராக இருந்தார்.

அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் திமுக ஆட்சியைக் கலைக்க முடிவு செய்து, பர்னாலாவிடம்அறிக்கை கோரியபோது, தர மறுத்தார். ஆட்சியைக் கலைக்க சிபாரிசு செய்ய மறுத்த பர்னாலா தனதுபதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் கருணாநிதிக்கும் பர்னாலாவுக்கும் இடையிலான உறவு நெருக்கமானது.

ஆனால், அதன் பின்னர் பா.ஜ.க.- அதிமுக கூட்டணி உருவானபோது, பா.ஜ.கவுக்கு நெருக்கமாகஇருந்த பர்னாலா முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க, திமுக அதை கண்டித்தது.

இம்முறை சென்னா ரெட்டியைப் போல ஒருவரை வைத்து ஜெயலலிதா அரசுக்கு நெருக்கடிகள்கொடுப்பதில் தீவிரமாக இருக்கின்றனர் திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்களும், துணைப்பொதுச் செயலாளருமான ஸ்டாலினும்.

அவர்களுடைய சாய்ஸ், ஜனார்தன ரெட்டி தான். பர்னாலா படு ஸ்டிரிக்ட் ஆனவர் என்பதாலும்இப்போது பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டதாலும், அவரை தங்கள் வழிக்கு வளைக்க முடியாது எனதிமுக இரண்டாம் மட்டத் தலைவர்கள் கருதுகின்றனர்.

இதனால் சுர்ஜித்துக்கு பதிலாக ஜனார்தன ரெட்டியையே கவர்னராக்க வலியுறுத்துமாறுகருணாநிதிக்கு நெருக்குதல் தந்து வருகின்றனர். ஆனாலும் பர்னாலாவே கருணாநிதியின் சாய்ஸ் ஆகஉள்ளார்.

திமுகவின் பரிந்துரையைப் பொறுத்து ரெட்டி அல்லது பர்னாலா தமிழக கவர்னராகக் கூடும் என்பதுஉறுதி.

இந் நிலையில் இப்போதைய தமிழக ஆளுநரான ராம்மோகன் ராவ் அவசரமாக டெல்லிவிரைந்துள்ளார். ஜனாதிபதி கலாமிடம் பலமுறை கெட்ட பெயர் வாங்கியவர் ராவ் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து அவருக்கு வந்த உத்தரவில், தமிழக அமைச்சரவையில்இனியும் மாற்றம் செய்ய ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டதாம். அடிக்கடிஅமைச்சர்களை மாற்றி ஜனநாயகத்தை அதிமுக அரசு கிண்டலடிப்பதாக ராஷ்ட்ரபதி பவன் அதிருப்திஅடைந்துள்ளது.

இதனால் சென்னையிலேயே இருக்க வேண்டாம் என ராவுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்காரணமாக ஊட்டி, ஹைதராபாத் என டூரிலேயே இருந்தார் ராவ். இதனால் ராவின்அப்பாயின்மென்ட் கிடைக்காமல் அமைச்சரவையை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார் முதல்வர்ஜெயலலிதா.

மாநில அரசு தொடர்பாக ஜனாதிபதிக்கு வழக்கமாக கவர்னர்கள் அனுப்பி வைக்க வேண்டியஅறிக்கையைக் கூட ராவ் அனுப்பாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு கலாமிடம் இருந்துஎச்சரிக்கை அனுப்பப்பட்டது.

கடந்த முறை அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதா பேக்ஸ் மூலம்கோரிக்கை வைக்க, அதை ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்டார் ராவ். இதனால் கவர்னர்பதவியையே ராவ் அசிங்கப்படுத்திவிட்டதாக ராஷ்ட்ரபதி பவன் மாளிகை அதிருப்தியில் இருந்தது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இப்போது மத்தியில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்ட நிலையில்ராவை நீக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பரிந்துரையால் ஆளுநரான ராவ், வெகுவிரைவிலேயே போயஸ் தோட்டத்துக்கு நெருக்கமானார். இதனால் அவரை நீக்க திமுக நெருக்கடிதர, அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது.

இந் நிலையில் டெல்லி சென்றுள்ள ராவ் இன்று காலை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்துப்பேசினார். சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கமறுத்து விட்டார். ராஜினாமா செய்யப் போகிறீர்களா என்ற கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கையும் ராவ் சந்திக்கிறார். அதன் பின்னர் அப்துல் கலாமையும் அவர்சந்திக்கவுள்ளார். வரும் ஜூன் 2ம் தேதி ஆளுநர் சென்னை திரும்புவார் என்று ஆளுநர் மாளிகைசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியிலேயே ராஜினாமா கடிதத்தை வாங்கிக் கொண்டு அவரை திருப்பி அனுப்புவார்கள் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X