For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபாய நிலையை தாண்டின 12 குழந்தைகள்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணம் தீவிபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 குழந்தைகள் அபாயக்கட்டத்தைத் தாண்டி குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெயர் விவரங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் அரசுமருத்துவமனையின் தீப் புண் சிகிச்சைப் பிரிவு நுழைவாயில் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.

அஜீத்குமார் (14), சூசைமேரி (8), ஆனந்த் (9), நவீனா (8), சரவணன் (9), விஜய் (8), விக்னேசுவரன் (10), கமலி(8), தேவி (9), ரமேஷ் (8),விஷ்ணுபிரியா (8), சூரியா (10) ஆகிய குழந்தைகள் அபாயக் கட்டத்தைத் தாண்டிகுணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவர்களின் உடம்பில் தீக்காயத்தின் பாதிப்பு 17 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளதாகவும் கூறினர்.

இவர்களைக் காண அதிக கூட்டம் வருவதால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படவாய்ப்பிருப்பதாகவும், இதனால் கூட்டத்தை வார்டுக்குள் விட வேண்டாம் என்றும் மாவட்டகலெக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X