For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசு விழாவில் கருணாநிதி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேது சமுத்திரம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டியபொறுப்பு தமிழக அரசுக்கும் உண்டு. எனவே மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை துறைமுகத்தில், புதிய மின் பளு தூக்கிகள், தூர்வாறும் கப்பலான காவிரி ஆகியவற்றின்தொடக்க விழா மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதிய முனையம்ஆகியவற்றை கருணாநிதி தொடங்கி வைத்தார்.

கப்பல் போக்குவரத்துறையின் அமைச்சராக திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு இருக்கும் நிலையில்,இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், சேது சமுத்திரம் திட்டம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின்பொருளாதாரத்திற்கும் பெரும் பயன் அளிக்கும் திட்டம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகநிறைவேற்றுவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.

இதேபோல ஒரு அரசு கொண்டு வரும் திட்டங்களை, தொடங்கும் திட்டங்களை அடுத்து வரும்அரசும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிக்கும் என்றார்கருணாநிதி.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி.ஆர். பாலு,

சேது சமுத்திரத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஜனவரி மாதம் நடக்கும். அதற்குள்அத் திட்டத்துக்கான நிதி, மற்றும் அனைத்துத் துறைகளின் அனுமதிகளும் பெறப்பட்டுவிடும்என்றார்.

நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளரும், துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமானஅன்பழகன், அமைச்சர் டி.ஆர்.பாலு, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, மத்திய அரசின் விழாவில், எந்தவித அரசுப் பதவியிலும் இல்லாத கருணாநிதி, கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசில் எந்தப்பதவியிலும் இல்லாத கருணாநிதி, கப்பல் போக்குவரத்துத்துறையின் திட்டங்களை துவக்கிவைத்தள்ளார். இதன் மூலம் விதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளார்.

விதிகளை மீறுவது என்பது திமுகவுக்கு புதிய விஷயமல்ல என்றார்.

இந் நிலையில் இதில் ஏதாவது விதி மீறல் உள்ளதா, இது தொடர்பாக கருணாநிதி மீது சட்டப்படியாகஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என தமிழக அரசு ஆராய்ந்து வருவதாக தலைமைச் செயலகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X