For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இராக்: தீவிரவாதிகளுடன் பேச புதிய இந்திய தூதர்

By Staff
Google Oneindia Tamil News

குவைத்:

நேற்றிரவு 8.30 மணிக்கு இந்தியரின் தலையை வெட்டிக் கொல்வோம் என்று எச்சரித்திருந்தஇராக்கிய தீவிரவாதிகள், அந்தக் கெடுவை நீட்டித்துள்ளனர். கெடு காலவரையின்றிநீட்டிக்கப்பட்டுள்ளதா அல்லது 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதா என்பதில் பெரும்குழப்பம் நிலவுகிறது.

இதற்கிடையே தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த ஓமன் நாட்டுக்கான இந்தியத் தூதர் தல்மீஸ்அகமதை மத்திய அரசு தனது மத்தியஸ்தராக இன்று நியமித்தது. தீவிரவாதிகளால் மத்தியஸ்தராகஅறிவிக்கப்பட்டுள்ள இராக்கிய பழங்குடிப் பிரமுகர் துலாய்மி மூலமாக இவர் தீவிரவாதிகளுடன்பேச்சு நடத்துவார்.

ஜெட்டா, பாக்தாத், ரியாத், குவைத், கானா ஆகிய நகர்களில் இந்தியத் தூதராகப் பணியாற்றியுள்ளதல்மீஸ் பெரும் அனுபவமும், அரபி மொழியில் தேர்ச்சியும் பெற்றவர். இதனால் தீவிரவாதிகளுடன்பேச்சு நடத்துவது எளிதாக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது.

குவைத்தைச் சேர்ந்த கப்ல் லிங்க் நிறுவனத்தில் டிரைவர்காளாகப் பணியாற்றி வந்த சுக்தேவ்,அந்தர்யாமி, திலக்ராஜ் ஆகிய மூன்று இந்தியர்களையும் அந் நிறுவனம் அமெரிக்கப் படைகளுக்குஉணவு சப்ளை செய்ய இராக்குக்கு அனுப்பியது.

உணவு லாரிகளுடன் இராக்குக்குள் சென்ற மூவரையும் மேலும் 4 பேரையும் கருப்புக் கொடிகள்என்ற தீவிரவாத அமைப்பு கடத்தி வைத்துள்ளது. குவைத் உணவு நிறுவனம் இராக்கில் இருந்துவெளியேற வேண்டும் என்பது உள்பட பலவித நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

தங்களுடன் பேச்சு நடத்த துலாய்மி என்ற மத்தியஸ்தரையும் அறிவித்தனர். ஆனால், அவருடன்குவைத் நிறுவனம் பேச்சு நடத்த முன் வராததையடுத்து ஒரு இந்தியரை வெள்ளிக்கிழமை இரவு 8.30மணிக்கு தலையை வெட்டிக் கொல்லப் போவதாக அறிவித்தனர்.

இதனால் இந்தியா முழுவதும் நேற்று அதிர்ச்சி அலை பரவியது. இந் நிலையில், மத்தியஸ்தரானதுலாய்மியின் கோரிக்கையை ஏற்று தலையை வெட்டிக் கொல்வதை தீவிரவாதிகள் தவிர்த்துள்ளனர்.

மேலும் துலாய்மியுடன் பேச்சுவார்த்தை நடத்த குவைத் நிறுவனம் முன் வந்துள்ளதால்,கொலைக்கான கெடுவையும் காலவரையின்றி நீட்டித்துவிட்டனர். இதையடுத்து இப்போதுதுலாய்மியும் குவைத் நிறுவனமும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இந்தியாவிடம் தீவிரவாதிகள் பணமும் எதிர்பார்ப்பதாகவும் தெரிகிறது. இந் நிலையில் இந்தியவெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பாக்தாத் விரைந்துள்ளார். அவர் மூலமாக தீவிரவாதிகளுக்குபண பட்டுவாடாவும் செய்யப்படும் என்றும் கருதப்படுகிறது.

அமெரிக்க பிடியில் 5,000 இந்தியர்கள்:

இதற்கிடையே இராக்கில் அமெரிக்கப் படையினரிடம் 5,000 இந்தியர்கள் காவலில் இருப்பதாகத்தெரியவந்துள்ளது.

இவர்களில் பெரும்பான்மையினர் லாரி டிரைவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள். பல்வேறுவளைகுடா நாட்டு நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கப்பட்டு, அமெரிக்கப் படையினருக்காகவேலை பார்க்க இவர்கள் இராக்குக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரும் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அந்தத் தகவல் கூடஅவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கப் படைகளால் தெரிவிக்கப்படவில்லை.

இராக்கில் லாரிகள் ஓட்ட மறுக்கும் இந்தியர்களை அமெரிக்கப் படையினர் தாக்குவதாகவும்செய்திகள் வந்துள்ளன. பெரும்பாலான கூலிகளும், டிரைவர்களும் அமெரிக்கர்களால் சிறைபிடிக்கப்பட்டதைப் போல நடப்படுவதாக, அங்கிருந்து தப்பி வந்த தொழிலாளர்கள்தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்தியர்கள் மீது இராக்கிய தீவிரவாதிகளுக்கு மரியாதை இருப்பதாகவும் அவர்கள்கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X