For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2வது வாக்குமூலம் தாக்கல் இல்லை: ஜெயலட்சுமி பல்டி

By Super
Google Oneindia Tamil News

மதுரை:

தொழிலதிபர்கள், சில அரசியல்வாதிகள், கோட்டை வட்டாரத்து சக்தி மிக்க நபர்களின் பெயர்ப் பட்டிலோடு இன்றுவெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெகஜால ஜெயலட்சுமியின் வாக்குமூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Jayalakshmiமுதல் வாக்குமூலத்தில் 21 போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்ட ஜெயலட்சுமி தனது இரண்டாம்வாக்குமூலத்தை இன்று தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது.

இந் நிலையில், இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலட்சுமி, இரண்டாவது வாக்குமூலம் ஏதும் தாக்கல்செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டார்.

இதன் பின்னணியில் ஜெயலட்சுமியிடம் ஏகத்துக்கும் பண பேரம் நடத்திருக்கலாம் என்று சந்தேகம்கிளப்பப்படுகிறது.

தங்களது பெயர்களையும் ஜெயலட்சுமி வெளியிட்டுவிடக் கூடாது என்பதற்காக அவரது ஆட்களிடம் முக்கியபிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பண பேரத்தில் இறங்கியுள்ளதாக மதுரையில் பரவலாகப்பேசப்பட்டு வந்தது.

மதுரை லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ள ஒரு கும்பல், ஜெயலட்சுமியின் சார்பில், அவருடன் தொடர்புவைத்திருந்தவர்களை போனில் பிடித்து மிரட்டி பணம் கேட்டு வருவதாகக் கூறப்பட்டது.

பலரும் பணத்தைக் கொண்டு வந்து செட்டில் செய்துவிட்டுப் போனதாகவும் பேசப்பட்டு வந்தது.

இதை உறுதி செய்யும் வகையில் இப்போது இரண்டாவது வாக்குமூலம் தாக்கல் செய்யும் திட்டத்தை ஜெயலட்சுமிகைவிட்டுள்ளார்.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களின் பெயர்களையும் வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி கோர்த்துவிடத்திட்டமிட்டிருந்ததாகவும், இதையடுத்து அவர்களது ஆட்கள் பெட்டிகளோடு வந்து சமாதானப்படுத்திவிட்டுப்போனதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் வாக்குமூலம் தாக்கல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது குறித்து ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்அழகிரிசாமியிடம் கேட்டபோது,

2வது வாக்குமூலம் தான் தாக்கல் செய்யப்படவில்லையே தவிர, வழக்கு விசாரணையின்போது அரசுவழக்கறிஞரின் கேள்விகளுக்கு முழு விவரத்துடன் பதில் அளிப்போம். முதல் வாக்குமூலத்தில் விடுபட்டதகவல்கள், ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்தவர்களின் விவரங்களை ஆதாரத்துடன் தெரிவிப்போம்என்றார்.

2வது வாக்குமூலத்தில் தங்களது பெயர்களை சேர்க்க வேண்டாம் என்று ஜெயலட்சுமியுடன் பலர் பண பேரம்நடத்தியதாக சொல்கிறார்களே? என்று கேட்டபோது,

அது பொய்யான தகவல். பேரம் பேசுவதாகச் சொல்லி ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்களான எங்களையேயே சிலர்மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பெயர் விவரத்தையும் கோர்ட்டில் சொல்லப் போகிறோம் என்றார்.

இந்த வழக்கில் படிப்படியாக உண்மைகள் வெளியே வரும்போது மேலும் பல போலீஸ்காரர்கள் முதல்அமைச்சர்கள் வரை பலரது முகத்திரைகள் கிழிக்கப்படும்.

இதற்கிடையே, ஜெயலட்சுமி மீது சிவகாசி பஞ்சு வியாபாரி தந்துள்ள பண மோசடி புகார் உள்ளிட்ட பலவழக்குகளின் அடிப்படையில் ஜெயலட்சுமியை போலீசார் இன்று கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக பரபரப்புஎழுந்துள்ளது.

இப்போது அவர் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சொக்கிகுளம் பெண்கள் காப்பகத்தில் போலீஸ் பாதுகாப்பில்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தன்னைக் கற்பழித்தாக ஜெயலட்சுமியால் புகார் சொல்லப்பட்டுள்ள போலீஸ்காரர் கண்ணன்,ஜெயலட்சுமி எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக குண்டைப் போட்டுள்ளார்.

தனக்கு மாற்று சேலைகளை எடுப்பதற்காக மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று ஜெயலட்சுமி கோர, நீதிமன்றம் அனுமதி தந்தது. இதையடுத்து வீட்டுக்குச் சென்ற ஜெயலட்சுமிக்குஅதிர்ச்சி காத்திருந்தது.

அந்த வீட்டில் இன்னொரு சாவியை வைத்துள்ள திடீர் நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அந்தவீட்டைத் திறந்து பல முக்கியமான ஆவணங்களையும், வீட்டில்

கிடந்த தனது பொருட்களையும் (ஜட்டி, பனியன் மற்றும் இத்யாதி சமாச்சாரங்கள்) எடுத்துக் கொண்டுபோயிருந்தாராம்.

கூடவே முக்கியமான விவகாரங்கள் அடங்கிய சிடி ஒன்றையும் இளங்கோவன் தரப்பு லவட்டிக் கொண்டுபோய்விட்டதாக ஜெயலட்சுமி கூறுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X