For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியா: ஹோமோ வழக்கில் இப்ராஹிம் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

புதரஜெயா:

மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஹோமோ செக்ஸ் வழக்கில் இருந்துவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகாதிர் முகமதின் வலதுகரமாக விளங்கியவர் இப்ராஹிம். ஆனால், இருவருக்கும்இடையே பின்னர் கருத்து வேறுபாடு உருவானது.

இந் நிலையில் தன்னுடன் இப்ராகிம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக, இப்ராகிமின் மனைவியின்கார் டிரைவர் புகார் கொடுத்தார். இதையடுத்து இப்ராஹிமை பதவி நீக்கம் செய்தார் மகாதீர்.

மேலும் ஹோமோ செக்ஸ் புகாரின் அடிப்படையில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில்1998ம் ஆண்டில் இப்ராகிமுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இப்ராகிம் தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனுவை மலேசியாவின் உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இதில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்ராகிம் மீது ஓரினச் சேர்க்கை புகார் கூறிய டிரைவர்அசீசான் அபுபக்கர் பலமுறை நீதிமன்றத்தில் குழப்பமான தகவல்களைத் தந்ததாகவும், அதன்அடிப்படையில் இப்ராகிமுக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து அவரை சிறையில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டனர்.

1998ம் ஆண்டில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டபோது போலீசாரால் தாக்கப்பட்டதில்இப்ராகிமின் முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறையில் அதற்கு உரிய சிகிச்சைஅளிக்கப்படாததால் வலி அதிகரித்து இப்போது வீல் சேரிஸ் தான் நடமாடி வருகிறார் 57 வயதானஇப்ராகிம்.

இப்போது சிறையில் இருந்து விடுவிக்கப்படவுள்ள அவர் சிகிச்சைக்காக உடனடியாக ஜெர்மனிகொண்டு செல்லப்படவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X