For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலுக்கு உருவாக்கப்பட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வரும் சட்டசபைத் தேர்தலிலும்தொடரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளின் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி,காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்நல்லகண்ணு, இந்திய தேசிய முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், பாசிச பாஜகவின் கையில் நாடு சிக்கி விடாமல் பாதுகாக்கவே கடந்தநாடாளுமன்றத் தேர்தலின்போது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

வெறும் 40 தொகுதிகளை மட்டும் வெல்லும் நோக்கத்தோடு மட்டும் இந்தக் கூட்டணி தமிழகத்தில்உருவாக்கப்படவில்லை.

பாசிச பாஜகவினன் போக்கு இன்னும் மாறவில்லை. எனவே எங்களது கூட்டணியும் தொடரும். பாசிச பாஜகவின்நோக்கத்தை முறியடிக்கும் விதத்தில் வரும் சட்டசபைத் தேர்தலிலும் 7 கட்சிகளைக் கொண்ட ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி தொடரும், எங்களது வெற்றிப் பயணம் நீடிக்கும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அவர்களது அமைச்சரவையில் இருந்த ஊழல் கறைபடிந்த, குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட அமைச்சர்களை நீக்குமாறு காங்கிரஸ் கோரியபோது அதைஜனநாயக விரோதம் என்று பாஜக வர்ணித்தது.

ஆனால் இப்போது அவர்கள் நடத்தும் போராட்டம் மட்டும் மிகவும் மரியாதைக்குரியது என்று பாஜக கூறுவதுகேலிக்குரியதாக உள்ளது.

நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கும் போக்கை பாஜக தொடர்ந்து மேற்கொண்டால், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் கருணாநிதி.

மத்திய அரசுக்கு கோரிக்கை:

முன்னதாக திமுக தலைமையில் நடந்த கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டமுக்கிய தீர்மானங்கள் சில:

1. எண்ணூ

2. தூத்துக்குடி அருகே உள்ள நாங்குனேரியில் ஏற்கனவே திட்டமிட்டபடி உயர் தொழில்நுட்பப்பூங்கா உருவாக்கப்பட வேண்டும்.

3. விழுப்புரம்- கும்பகோணம், தஞ்சாவூர்- திருவாரூர்- நாகை, தூத்துக்குடி- நெல்லை-தென்காசி,சேலம்- விருதாச்சலம், மதுரை- திண்டுக்கல்-பழனி- பொள்ளாச்சி- கோவை, மதுரை- போடி ஆகியமீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்ற வேண்டும்.

4. திண்டுக்கல்- சபரி மலை இடையிலும், பழனி- சாம்ராஜ்நகர் இடையிலும் புதிய அகல ரயில்பாதை அமைக்க வேண்டும்.

5. குளச்சல் துறைமுகத்தை பன்னாட்டுத் துறைமுகமாக விரிவுபடுத்த வேண்டும்.

6. கடல் வணிகம் குறித்த பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைக்க வேண்டும்.

7. சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்த வேண்டும்.

8. கச்சத்தீவு பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக ஒரு குழுவை நாங்கள்அமைக்கவுள்ளோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X