For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. இன்று டெல்லி பயணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இப் பயணத்தின் போது பிரதமர்மன்மோகன் சிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

வரும் 19ம் தேதி சிகிச்சைக்காக லண்டன் செல்ல இருக்கும் முதல்வர் ஜெயலலிதா 15ம் தேதி டெல்லி செல்லும்முடிவில் இருப்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந் நிலையில் இன்றிரவு அவர் டெல்லி செல்கிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்கூறப்பட்டிருப்பதாவது:

இன்றிரவு டெல்லி செல்லும் ஜெயலலிதா, நாளை காலை 11 மணிக்கு சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லவளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு இல்ல விருந்தினர் மாளிகையை திறந்து வைக்கிறார்.

வரும் சனிக்கிழமை விஞ்ஞான பவனில் நடைபெறும் மாநில முதல்வர்கள் -மற்றும் உயர் நீதிமன்றத் தலைமைநீதிபதிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

இப்பயணத்தின்போது பிரதமரைச் சந்தித்து தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்தியஅரசின் ஆதரவைக் கோரி மனு அளிக்கவுள்ளார்.

மேலும் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு, சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும், சென்னையில்கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் அவர்பிரதமரிடம் வலியுறுத்தவிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

தனது வெளிநாட்டுப் பயணத்துக்கான சில முக்கிய உதவிகளை அவர் மத்திய அரசிடம் கேட்கக் கூடும் என்றுதெரிகிறது. அவர் கேட்கும் அளவுக்கு அன்னியச் செலாவணி ஒதுக்குவதிலும், மூத்த அதிகாரிகள் உள்பட 18பேருக்கு 2 மாத காலத்துக்கு வெளிநாடு செல்ல அனுமதிப்பதிலும் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருகிறது.

இந்த விஷயத்தை பிரதமருடன் பேசவுள்ளார் ஜெயலலிதா. அதன் பின்னரும் மத்திய அரசு இறங்கி வராவிட்டால்,தனது வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு சென்னை போரூரில் உள்ள முக்கியமான தனியார்மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

முதல்வருக்காக அங்கு தனி அறை கட்டும் வேலையும் நடப்பதாகத் தகவல்.

ராமதாஸ் யோசனை:

இந் நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் எதற்காக டெல்லி செல்கிறார் என்ற முழு விவரத்தையும் தமிழக அரசு வெளியிடவில்லை. கடந்தமக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் செய்யப்பட்ட தில்லுமுள்ளு காரணமாகவேதேர்தலில் அதிமுக தோற்றதாக குண்டைப் போட்டார் ஜெயலலிதா.

இந்த டெல்லிப் பயணத்தின்போது, மின்னணு எந்திரத்தில் தில்லுமுள்ளு செய்ய முடியும் என்பதை ஜெயலலிதாஆதாரப்பூர்வமாக தலைமைத் தேர்தல் கமிஷனிடம் நிரூபித்துக் காட்டிவிட்டு வெற்றியோடு தமிழகம் திரும்பவேண்டும். இதற்காக தேர்தல் கமிஷ்னரிடமும் அப்பாயிண்மென்ட் வாங்க வேண்டும். முடியாவிட்டால், தமிழகமக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X