For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ கைது: தலைவர்கள் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை போலீஸார் கைது செய்ததற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி:

திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போக்குவரத்து விதிகளை குறிப்பிட்டு மாநகரங்களுக்குள் ஊர்வலம் நடத்ததடை விதிப்பது பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஏற்புடையது இல்லை.

வைகோவின் 42 நாட்கள் நடைபயணத்தை கருத்தில் கொண்டு அவருக்கு சிறப்பு அனுமதியளித்திருக்கலாம்.மேலும் வைகோவின் கைது ஜனநாயகத்திற்கு புறம்பானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் கோபாலபுரத்தின் குறுகிய வீதிகளில் ஊர்வலமாக வந்து என்னைவீட்டில் சந்தித்தார். அவருக்கு அனுமதி அளித்த காவல் துறையினர் அகலமான அண்ணா சாலையில் வைகோவின்ஊர்வலத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்தது பராபட்சமான செயல் என்றார்.

ராமதாஸ்:

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

கடந்த 40 நாட்களாக நடை பயணம் மேற்கொண்டு இன்று காலை சென்னைக்குள் நுழைந்த வைகோவுக்கும்,அவரது நடைபயணத்திற்கும் தடை விதித்து அவரை அதிமுக அரசு கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

நல்லகண்ணு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

நடைபயணத்திற்கு தடைவிதிப்பது குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை மறுக்கும் எதேச்சதிகாரநடவடிக்கையாகும். போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் நள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்டவைகோவை காவல்துறையினர் கைது செய்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.

கி. வீரமணி:

திராவிட கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லையிலிருந்து எந்த விதப்பிரச்சினையையும் ஏற்படுத்தாமல் மிகவும் கட்டுப்பாடாக வைகோவின் நடைப்பயணம் நடந்திருக்கிறது. பயணம்நிறைவு பெறும் நாளில், -அதுவும் அறிஞர் அண்ணா பிறந்த நாளில், அவரைக் கைது செய்து இருப்பதுதேவையற்றது; தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டிய ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

இதே போல் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகமும் வைகோ கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X