For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்ப் படங்களுக்குத் தடை: ராஜ்குமாருக்கு கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கர்நாடகத்தில் புதிய தமிழ்ப் படங்களைத் திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து போராட்டம் நடத்ததமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு, மூத்த திரைப்படத் தயாரிப்பாளரும் காங்கிரஸ்பிரமுகருமான முக்தா சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.

புதிய தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களால் தான் கன்னடப் படங்கள் ஓடுவதில்லை என்று கூறி நடிகர்ராஜ்குமார் தலைமையில் கன்னடத் திரையுலகினர் போராட்டம் நடத்தினர். இதனால் கன்னடம் தவிர்த்த பிறமொழிப் படங்கள் அந்ததந்த மாநிலங்களில் ரிலீஸ் ஆகி 7 வாரம் கழித்தே கர்நாடகத்தில் திரையிட வேண்டும்என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கர்நாடக தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கன்னடப் படங்களை ஓட்டினால் தியேட்டர்களையே மூடும் நிலை ஏற்படும் என்று கூறும் அவர்கள், பிற மொழிப்படங்களுக்குத் தான் மக்களே வருகிறார்கள் என்கின்றனர்.

இந் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் புதுப் படங்கள் ஏதும் கர்நாடகத்தில் கடந்த 4 வாரமாகரிலீசாகவில்லை. பழைய தமிழ்ப் படங்களையே தியேட்டர் உரிமையாளர்கள் திரையிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை ரஜினி, கமல், விஜய்காந்த் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் யாரும் தமிழ்த்திரைப்படங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் அதன் தலைவர்கே.ராஜன் தலைமையில் நடந்தது. அதில்,

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை சூட்டக் கூடாது, திருட்டு விசிடி தயாரிப்பாளர்களை ஒடுக்கஅவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தமிழ்ப் படங்களை 7 வாரம் கழித்தே கர்நாடகத்தில்திரையிட வேண்டும் என்ற உத்தரவை அம் மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் தமிழ்த் திரையுலகின் சார்பில் கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

முக்தா சீனிவாசன் கடிதம்:

இதற்கிடையே ராஜ்குமாருக்கு, முக்தா சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில்,

கர்நாடகத்தில் புதிய தமிழ்ப் படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகத்துக்கு பெரும் நஷ்டம்ஏற்படும்.

கர்நாடகத்தின் இந்தப் போக்கைக் கண்டித்து ஆந்திர பிலிம் சேம்பரில் கடுமையான தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், கன்னட படம் எடுக்க பிலிம் ரோலே தரக் கூடாது, இனிமேல் கன்னட நடிகர்,நடிகைகள், டெக்னீசியன்களை பிற மாநிலப் படங்களில் ஒப்பந்தம் செய்யவே கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதை பிற மாநிலங்கள் அமலாக்கினால் அது பெரும் ஆபத்தானதான முடியும். இந்தியாவின் ஒரு பகுதி தான்கர்நாடகம் என்பதை மறந்துவிடாமல் கன்னட திரையுலகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கன்னட திரையுலகின் இந்த முடிவுக்கு உங்கள் ஆசிர்வாதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்த் திரையுலகம்பாதிக்கப்படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் நீங்கள் சென்னையிலேயேவாழ்ந்தவர்.

இவ்வாறு முக்தா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X