For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது திட்டம்: சிங்களர்கள் மீது கருணாநிதி புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேது சமுத்திரத் திட்டத்தை சீர்குலைக்க சிங்களர்கள் முயற்சிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையின் சார்பில் ரூ. 8 கோடி செல்வில் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் ஆகியஇடங்களில் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. இதேபோல குரோம்பேட்டையில் நிழற்குடைஅமைக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டப் பணிகளை சென்னை தாம்பரத்தில் துவக்கி வைத்து கருணாநிதி பேசுகையில்,

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படக் கூடாது என்று சிங்களர்கள் நினைக்கிறார்கள். இதனால் தமிழகத்தில்உள்ள சிலரைத் தூண்டிவிட்டு இத் திட்டத்தை சீர்குலைக்க முயல்கிறார்கள். இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது சிங்களஅரசா, சிங்கள வியாபாரிகளா அல்லது தனிப்பட்ட சிங்களர்களா என்று எனக்குத் தெரியாது.

100 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்தத் திட்டத்துக்கு இப்போது தான் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுஅனுமதி தந்துள்ளது. ரூ. 2,000 கோடியையும் ஒதுக்கியுள்ளது.

இப்போது இத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட சிங்களர்கள் முயற்சிக்கிறார்கள். கடலின் சுற்றுச்சூழல்பாதிக்கப்படும், மீன் வளம் குறையும் என்று தமிழகத்துக்குள் பொய்யான பிரச்சாரத்தைப் பரப்பி வருகிறார்கள்.

இதையெல்லாம் முறியடித்து திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் கைகளில் தான் உள்ளது.

மத்தியில் ஆட்சிக்கு வந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் அரசு, 100 நாட்களிலேயே தமிழகத்துக்குத் தரப்பட்ட பலஉறுதிமொழிகளை நிறைவேற்றித் தந்துள்ளது. ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்வை சீரழித்த சென்வாட் வரியைநீக்கியதோடு, தமிழர்கள் பல ஆண்டு கோரிக்கையான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் வழங்கினார்கள்என்றார்.

இந் நிகழ்ச்சியில் பேசிய டி.ஆர். பாலு, தமிழகத்தில் ரூ. 964 கோடி செலவில் புதிய சாலைத் திட்டங்களை எனதுதுறை விரைவில் தொடங்கவுள்ளது. 150 நாட்களில் இந்த சுரங்கப் பாதைகள் மற்றும் நிழற்குடைகள் பணிமுடிவடையும் 151வது நாள் நடக்கும் நிகழ்ச்சியில், இவை அனைத்தையும் கருணாநிதியே திறந்து வைப்பார்என்றார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி தமிழகமக்களுக்குத் தேவையான பல உருப்படியான திட்டங்களை மத்தியில் உள்ள 12 தமிழக அமைச்சர்களும்நிறைவேற்றி வருகிறோம். எங்களுக்கு ஜெயலலிதா அரசின் ஒத்துழைப்பு சுத்தமாக இல்லை. அதையும் மீறித் தான்நலப் பணிகளை ஆற்றி வருகிறோம் என்றார்.

திமுக விழாவா? அரசு விழாவா?:

இதற்கிடையே, மத்திய அரசின் சாலைத் திட்டப் பணிகளின் தொடக்க விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதிஅழைக்கப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்தப் பதவியிலும் இல்லாத கருணாநிதி எப்படிமத்திய அரசு விழாவுக்குத் தலைமை வகிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

விழாவில் கருணாநிதி முக்கிய அழைப்பாளராகக் கலந்து கொண்டு அடிக்கலும் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில அரசைச் சார்ந்த அமைச்சர்களோ, ஆலந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும்அமைச்சருமான வளர்மதியோ அழைக்கப்படவில்லை.

மத்திய அரசு நிகழ்ச்சி என்று கூறப்பட்டாலும் முற்றிலும் திமுக கரை வேட்டிகளே காணப்பட்டதால் இது திமுகவின்கட்சி நிகழ்ச்சி போன்றே காணப்பட்டது.

ஒரு நிழற்குடை, 2 அடிக்கல்கள்:

குரோம்பேட்டை பகுதியில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்க பல்லாவரம் நகராட்சியில் சமீபத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலந்தூர் அதிமுக நகராட்சித் தலைவர் தன்சிங்முன்னிலையில்28ம் தேதி அமைச்சர் வளர்மதி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிழற்குடைக்காக தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 28 லட்சத்தை ஒதுக்குவதாகவும் வளர்மதிஅறிவித்தார்.

இந் நிலையில், குரோம்பேட்டை சாலையானது தேசிய நெடுஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால்,மத்திய அரசின் சார்பில் நிழற்குடை அமைக்கப்படும் என்று அறிவித்து கருணாநிதி தலைமையில் அடிக்கல் நாட்டுவிழாவையும் நடத்தியுள்ளார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.

ஆக ஒரு நிழற்குடைக்கு இரு அடிக்கல்கள் நாட்டப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X