• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஜினியின் சந்திரமுகி தொடக்க விழா ரத்து?

By Staff
|

சென்னை:

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்கும் சந்திரமுகி படத்தின் தொடக்க விழா அடுத்த மாதத்துக்குதள்ளிப் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புரட்டாசி மாதம் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சிவாஜி கணேசனின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவாஜிகணேசனின் தி.நகர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் தனது மனைவி லதாவுடன் வந்து கலந்து கொண்டார் ரஜினி.நடிகர்கள் விஜயகாந்த், விஜயக்குமார், சின்னிஜெயந்த், பாலாஜி, நடிகை செளகார் ஜானகி, இசையமைப்பாளர்கணேஷ் உள்ளிட்ட பலரும் சிவாஜியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

செவாலியர் சிவாஜி அறக்கட்டளைக்கு நடிகை செளகார் ஜானகி ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கினார். சிவாஜிரசிகர் மன்றம் சார்பில் 2,000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

பி.வாசு இயக்கும் சந்திரமுகி படத்தின் தொடக்க விழாவும் கமல் தலைமையில் இன்று சிவாஜியின் வீட்டில்நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று இந்த விழா அடுத்த மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டதாகக்கூறப்படுகிறது.

கோடம்பாக்கத்தில் பொதுவாக புரட்டாசி மாதம் எந்தப் படத்திற்கும் பூஜை போடப்படுவதில்லை. அந்தசென்டிமெண்ட காரணமாக ரஜினி படத்தின் பூஜையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினி பேச்சு:

சிவாஜியின் வீட்டில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரஜினி, பின்னர் நிருபர்களிடம்பேசுகையில்,

முதல்வர் ஜெயலலிதா திரைப்படத்துறைக்கு சலுகைகளும் நடிகர்-, நடிகைகளுக்கு விருதுகளும் அறிவித்துள்ளார்.தமிழ் திரை உலகை அவர் காப்பாற்றி இருக்கிறார். தமிழ் திரையுலகம் வாழ்வு முழுவதும் அவருக்கு கடன்பட்டுஇருக்கிறது. அவருக்கு என் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவாஜி இப்போது இல்லாதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஏவி.எம். நிறுவனம் 12 வருடங்கள் படம்தயாரிக்காமல் இருந்து என்னை வைத்து முரட்டுக்காளை படம் எடுத்தது. அது போல் சிவாஜி புரொடக்ஷன்ஸ்நிறுவனமும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கும் சந்திரமுகி படத்தில் நான் நடிக்கிறேன்.

இந்தப் படம் எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ் மாதிரி. தமிழ் சினிமாவில் இந்தப் படம் ஒரு சிகரமாக இருக்கும்.மாறுபட்ட சவாலான கேரக்டரில் நான் நடிக்கிறேன். ராம்குமார் தயாரிப்பு அனுபவம் உள்ளவர். வாசு நல்லஇயக்குநர். பிரபுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். படையப்பா மாதிரி இது ஒரு படையம்மாவாக இப்படம்இருக்கும்.

சந்திரமுகி என்ற கதாபாத்திரம் யாரைக் குறிக்கிறது என்பது சஸ்பென்ஸ். தமிழில் இது மாதிரி ஒரு கதை வந்ததுஇல்லை. நான் எந்த கதையையும் சீக்கிரம் ஒத்துக் கொள்ள மாட்டேன். இது எனக்கு பிடித்த கதை. எனவேஉங்களுக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு நவம்பர் 1-ம் தேதி தொடங்கும். ஐஸ்வர்யா ராயை கதாநாயகியாக நடிக்கவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.

ஜக்குபாய் படத்திற்கு கதை சரியாக அமையவில்லை. சந்திரமுகி படத்தை முடித்த பிறகு ஜக்குபாய் படத்தைஎடுப்பேன் என்று கூறினார்.

பிரபு பேட்டி:

பின்னர் பிரபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

சிவாஜி எங்களுடனேயே இருப்பது போல் இருக்கிறது. அவரது ரசிகர்கள் இந்த வீட்டிற்கு வந்து அஞ்சலிசெலுத்துகிறார்கள்.

ரஜினி எங்களது குடும்ப நண்பர். சென்னையில் இருந்தால், அம்மாவை வந்து அடிக்கடி பார்த்து விட்டுச் செல்வார்.அப்படி ஒரு முறை வந்தபோது, சிவாஜி புரொடக்ஷனுக்கு விரைவில் ஒரு படம் பண்ணுகிறேன் என்று கூறினார்.அதன்பிறகு நாங்கள் அதை மறந்து விட்டோம்.

10 நாட்களுக்கு முன்பு, எங்களுக்கு போன் செய்து பி.வாசு இயக்கத்தில் உங்கள் தயாரிப்பில் ஒரு படம்பண்ணுகிறேன் என்று கூறினார். எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன்ஆகிய படங்களில் அவரோடு நான் நடித்திருக்கிறேன். இப்போது மீண்டும் அவருடன் நடிப்பதில்பெருமைப்படுகிறேன். படத்தில் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. யார் கதாநாயகி என்பதை சிலநாட்களில் அறிவிப்போம்.

சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடைபெறும். தந்தைக்கு உடல் நலமின்மை,அவரது மறைவு இதனால்தான் நாங்கள் படங்கள் ஏதும் தயாரிக்காமல் இருந்தோம். இனி வருடத்திற்கு 2,3படங்கள் தயாரிப்போம்.

சிவாஜியை எங்களைவிட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். மணிமண்டபம் கட்டுவது தொடர்பானநடவடிக்கைகளை அவர் விரைவில் எடுப்பார் என நம்புகிறேன் என்று கூறினார்.

இன்று மாலை சிவாஜியின் பிறந்த நாள் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்குமத்திய அமைச்சர் சுனில்தத் தலைமையேற்கிறார். இதில் நடிகர் கமல் கலந்து கொள்கிறார். ரஜினியும் இந்தவிழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X