For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சரித்திர சாதனை- ரஜினி புகழாரம்

By Staff
Google Oneindia Tamil News
Vijaykanth, Rajini, Jayalalitha and Kamal
தமிழ்த் திரையுலகை பெரும் நெருக்கடியிலிருந்து காப்பாற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைதெரிவிக்காவிட்டால் நான் சினிமாக்காரனே இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

பல ஆண்டுகளாகவே ஜெயலலிதாவுக்கும், நடிகர் ரஜினிகாந்த்துக்கும் இடையே பூசல் இருந்து வந்தது. ஜெயலலிதாவைகடுமையாக சாடி கடந்த 1996ம் ஆண்டு ரஜினி பேசினார். ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டால் தமிழகத்தை ஆண்டவனால் கூடகாப்பாற்ற முடியாது என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Rajiniபாபா ஸ்பெஷல்:

பின்னர் மெதுவாக அதிமுக பக்கம் நெருங்க ஆரம்பித்தார். பாபா படம் மிக அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால்,தியேட்டர்காரர்களே டிக்கெட் விலையை கூடுதலாக நிர்ணயித்துக் கொள்ள அனுமதி கோரி ஜெயலலிதாவை பூச்செண்டுடன்சென்று சந்தித்தார்.

இதையடுத்து பாபாவுக்கு ஸ்பெஷல் அனுமதி தரப்பட்டது. சமீபத்திய தேர்தலிலும் இந்த நட்பு தொடர்ந்தது. பா.ஜ.க.- அதிமுககூட்டணியை ஆதரிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார் ரஜினி. ஆனால், ரஜினியின் இந்தக் கோரிக்கை மக்கள் மத்தியில்எடுபடாமல் போய்விட்டது.

இந் நிலையில் நேற்று ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்ஜெயலலிதாவைப் புகழ்ந்து தள்ளினார்.

ரஜினி பேச்சு:

அவர் பேசியதாவது:

இதுவரை நான் பல பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் இதுதான் சத்தியமான பாராட்டு விழா. முதல்வர்ஜெயலலிதா செய்துள்ள சாதனைகள் சாதாரணமானது அல்ல.

வீரப்பன் பிரச்சினையும், வீராணம் பிரச்சினையும் நிச்சயம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அதற்காக எனது மனமார்த்தபாராட்டுக்கள். ஹாட்ஸ் ஆப் டூ யூ!

வீரப்பனை வீழ்த்தியதன் மூலம் தமிழகத்தின் பெருமையை இந்திய அளவிலும், உலக அளவில் இந்தியாவின் பெருமையையும்அவர் உயர்த்தி விட்டார்.

நான் சினிமாக்காரனே அல்ல...

இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்றுதான் முதலில் கூறியிருந்தேன். ஏற்கனவே பத்திரிக்கைள் மூலமாக முதல்வரைப்பாராட்டி விட்டேன். எனவே நான் வராவிட்டாலும் கூட முதல்வர் தவறாக நினைக்க மாட்டார் என்றுதான் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளிதரனிடம் கூறினேன். ஆனால் நான் கண்டிப்பாக வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இப்போது கூறுகிறேன். இந்த விழாவுக்கு நான் வந்திராவிட்டால் நிச்சயம் நான் சினிமாக்காரனே அல்ல. திருட்டு விசிடிக்கு எதிராகமுதல்வர் எடுத்துள்ள நடவடிக்கையால் தமிழ்த் திரையுலகை அவர் காப்பாற்றி விட்டார்.

கம்பீரம், நடையை ரசித்தேன்:

முதல்வரை நான் முதன் முதலில் பார்த்த சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். அப்போது நான் திரைப்பட கல்லூரிமாணவனாக இருந்த நேரம். டப்பிங் ஒன்றுக்காக நானும் சக மாணவர்களும் காத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது அங்கு ஜெயலிதா அவர்கள் வந்தார். அவரது நடை, கம்பீரம் ஆகியவற்றைப் பார்த்து நாங்கள் அசந்து போய்நின்றிருந்தோம். அவர் நடந்து வந்தது போன்று, பின்னர் எனது நண்பர்களிடம் நடந்து காட்டி ரசித்தேன். அந்த கம்பீரம் இன்றும்அவரிடம் உள்ளது என்றார் ரஜினி.

கமல்ஹாசன் கோரிக்கை:

பின்னர் கமல்ஹாசன் பேசுகையில், ஒரு தலைவருக்கு என்னென்ன குணநலன்கள், தகுதிகள் இருக்க வேண்டுமோ அவை எல்லாம்நம்முடைய முதல்வரிடம் உள்ளன.

இந்த நல்ல நேரத்தில் இரண்டு கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்க வேண்டும். அதற்குமுதல்வர் மனது வைக்க வேண்டும்.

Kamal, Rajini and Vijaykanthஅதேபோல, மறைந்த அவ்வை டி. கே.சண்முகம் அண்ணாச்சி அவர்கள் பெயரில் அல்லது இயக்குனர் கே.பாலச்சந்தரின்பெயரில் ஒரு நாடகப் பள்ளியை தொடங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கமல்.

ரூ. 1.8 கோடி நிதி:

நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், இயக்குநர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசினர்.

விழாவின் இறுதியில் முதலமைச்சரின் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு திரையுலகம் சார்பில் ரூ. 1 கோடியே எட்டு லட்சம்ரூபாய் (கூட்டுத் தொகை 9) நிதியுதவி அளிக்கப்பட்டது.

தீபாவளி: ஆதரவற்றோர்க்கு ரஜினி உதவி

இந் நிலையில் தீபாவளியையொட்டி இன்று தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் ஏழை மக்களுக்கு ரூ. 15லட்சம் அளவுக்கு உதவிகளை வழங்கினார் ரஜினி.

52 ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உதவிகளை ரஜினியின் சார்பில் அவரது உதவியாளர் சத்யநாராயணாவழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X