For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் தளவாய் மீது பெண் டாக்டர் செக்ஸ் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் மீது சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் புகார்கூறியுள்ளார். ஆனால், அதை சுந்தரம் திட்டவட்டமாக மறுத்தார்.

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் கோமதி. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள வீட்டு வசதி வாரியகுடியிருப்பில் வசிக்கிறார். இவரது கணவர் ஈஸ்வரன் திருமணம் ஆன 6 மாதத்தில் இறந்து விட்டார்.

கோமதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந் நிலையில் இவரை நாகப்பட்டினத்துக்குமாற்றியிருக்கிறார்கள். இந்த மாறுதலை ரத்து செய்யக் கோரி அமைச்சர் தளவாய் சுந்தரத்தை கோமதி சந்தித்துள்ளார்.

அப்போது, தன்னை தளவாய் சுந்தரம் செக்ஸ் உறவுக்கு அழைத்தாக புகார் கூறும் கோமதி, இது குறித்து முதல்வர் ஜெயலலிதா,காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்ற கோமதி, அங்கும்புகார் கொடுத்துள்ளார். மேலும் முதல் தகவல் அறிக்கை வேண்டுமென்றும் கேட்டுள்ளார். அதற்கு அதிகார்கள் மறுத்துவிட பின்னர்நிருபர்களை சந்தித்த கோமதி கூறியதாவது:

நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த விதவை. நான் பல பிரச்சினைகளை சந்திக்கிறேன். எனது டிரான்ஸ்பர் தொடர்பாகதளவாய் சுந்தரத்தை சந்தித்தபோது, அவர் என்னை உடலுறவுக்கு அழைத்தார்.

இதுகுறித்து எனது மேல் அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகார் கொடுத்தேன். இது தெரிந்த தளவாய் சுந்தரம், என்னைக்கொல்லப்போவதாக மிரட்டினார். பல முறை என்னை பின் தொடர்ந்து வந்து காரை இடித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வரிடமும் புகார் கொடுத்தேன். அவரும் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் கோட்டைக்கு சென்று முதல்வரின்தனிப் பிரிவில் புகார் செய்ய முயன்றேன். அப்போது தளவாய் சுந்தரம் என்னை அழைத்து, நீ எங்கு போனாலும் என்னை ஒன்றும்செய்ய முடியாது. காவல் துறையே என் காலடியில் உள்ளது என்று கூறினார்.

அதன்பின்பு அவரது காவலர்கள் என்னை தாக்கி கழுத்தை பிடித்து வெளியேற்றினர். என் கார் கண்ணாடிகளையும் உடைத்துநொறுக்கி விட்டனர். இப்போது அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பதவி இறக்கம் செய்து பணியில் அமர்த்தி உள்ளனர்.என்னை எப்படியெல்லாம் பழிவாங்க முடியுமோ அப்படியெல்லாம் பழிவாங்கி வருகிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் நீதி, நியாயம் கிடைக்காது. இனி இங்கு இருந்தால் என்னை கொலை செய்து விடுவார்கள் என்ற பயமாகஉள்ளது. இங்கு நான் மாதம் ரூ. 25,000 சம்பாதிக்கிறேன். ஒரு முஸ்லிம் பெண்ணாக மாறி செளதி அரேபியாவுக்கு சென்றால் மாதம்ரூ. 2 லட்சம் சம்பாதிப்பேன்.

ஆனால் அப்படிப் போகும்போது, இவர்களது வண்டவாளங்களை எல்லாம் வெளிப்படுத்தி விட்டு தான் போவேன் என்றார்கோமதி.

தளவாய் மறுப்பு:

இந்தப் புகார் குறித்து அமைச்சர் தளவாய் சுந்தரத்திடம் நிருபர்கள் கேட்டபோது, என்மீது புகார் கூறும் அந்த டாக்டர் ஒரு மனநோயாளி. இது பொய்யான புகார். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.

ஜெயலட்சுமி விவகாரத்தில் தளவாய் சுந்தரத்தின் பி.ஏ. பெயர் அடிபட்டதும், பின்னர் அவர் சஸ்பெண்ட் ஆனாதும்நினைவுகூறத்தக்கது. ஆனால், தளவாய் மீது ஜெயலட்சுமி நேரடியாக புகார் ஏதும் கூறவில்லை. இப்போது அவர் மீதே பாலியல்புகார் கூறியுள்ளார் டாக்டர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X