• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னை மன்னுச்சுரு.. என்ன விட்டுடு...

By Staff
|

காஞ்சிபுரம்:

Jayendrarமுதல்வர் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டு சங்கராச்சாரியார் கேசட் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து சங்கராச்சாரியாரிடம் விசாரணை நடந்தபோது, முதல்வர்ஜெயலலிதாவிடம் பேச தன்னை அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார் சங்கராச்சாரியார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நீங்கள் முதல்வர் உள்பட யாருடனும் தொலைபேசியில் பேசுவது சாத்தியமே இல்லைஎன்று எஸ்.பி. பிரேம்குமாரும், கூடுதல் எஸ்.பி. சக்திவேலும் கூறிவிட்டதாகக் தெரிகிறது.

ஆனாலும், சங்கராச்சாரியார் கலங்கிய விழிகளுடன் தொடர்ந்து இதே கோரிக்கையை முன் வைக்க, வீடியோவில்வேண்டுமானால் பேசுங்கள் அந்த கேசட்டை முதல்வருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்அதிகாரிகள்.

அதுவரை சங்கராச்சாரியார் பேசுவதை அவருக்குத் தெரியாமல், அந்த அறையில் இருந்த ரகசிய கேமராக்களில் படம் பிடித்துவந்த போலீசார், இம் முறை அவருக்கு முன்பாகவே ஒரு கேமராவை ஸ்டாண்ட் போட்டு நிறுத்த, கடகடவென பேசஆரம்பித்திருக்கிறார் சங்கராச்சாரியார்.

அதில் அழுதபடியே பேசியுள்ள சங்கராச்சாரியார்,

சங்கரரானை நான் தான் கொலை செய்யச் சொன்னேன். பத்தே நிமிஷத்துல புத்தி தடுமாறிப் போச்சு. காமாட்சியம்மன் கோவில்லஅம்மனா இருக்கிறது நீங்க தான். நீ தான் இப்போ நேக்கு அம்மன், கடவுள்.

உன்னை வேண்டி கேட்டுக்கிறேன்... என்னை மன்னிச்சுரு.. என்னை விட்டுடு.. இந்த உதவியை சாகுற வரைக்கும் மறக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார் சங்கராச்சாரியார் என்கிறது காவல்துறை வட்டாராம்.

இதை முதல்வருக்கு அனுப்புவதற்காக எல்லாம் நாங்கள் சூட் செய்யவில்லை. அவர் வாயால் மேலும் ஏதாவது உண்மை வரலாம்என்பதால் அவருக்கு அப்படி ஒரு உறுதிமொழி தந்து பேச வைத்தோம் என்கின்றனர்.

இந்தத் தகவல் பா.ஜ.க. தலைமையையும் எட்டியுள்ளது. டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலாளர்சுஷ்மா சுவராஜ், ஜெயலலிதாவை காமாட்சி அம்மன் என்றெல்லாம் ஜெயேந்திரர் புகழ்ந்ததாகவும், மன்னிப்பு கேட்டதாகவும்செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தச் செய்தி உண்மையா என்று சங்கராச்சாரியாரிடம் நாங்கள் சிறையில் கேட்டபோது அதை முழுக்க முழுக்க மறுத்தார். தவறேசெய்யாத நான் ஏன் அப்படியெல்லாம் சொல்லப் போகிறேன் என்று திருப்பிக் கேட்டார் சங்கராச்சாரியார் என்றார் சுஷ்மா.

தமிழ்நாடு ஹாஸ்பிடலில் அத்வானிக்கு ஷேர்!!:

இதற்கிடையே இன்னொரு பரபரப்பான செய்தியும் காவல்துறை மட்டத்தில் இருந்தே கசிகிறது.

இப்போதைய முழு விவகாரத்துக்கும் முக்கியக் காரணமாகப் பேசப்படும் தமிழ்நாடு ஹாஸ்பிடலில் 50 சதவீத ஷேர்கள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின்மகளின் பெயரில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதை தன்னிடம் விசாரணை நடத்திய போலீசாரிடமே சங்கராச்சாரியார் சொன்னதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சங்கர மடத்தின் சார்பில் வாங்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கும், அது யாருக்குச் சொந்தம் என்பதில் ஜெயேந்திரருக்கும் மகா சக்திபெற்றவர்களுக்கும் இடையே நடந்த மோதலால் தான், கொலை விவகாரம் தோண்டப்பட்டதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் மறைமுகமாகசந்தேகத்தைக் கிளப்பி வரும் நிலையில், இதில் அத்வானியையும் இழுத்துவிட்டு வரும் செய்திகள் பரபரப்பைக் கூட்டியுள்ளன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X