பூக்கூடையில் வைத்து விஜயேந்திரருக்கு விசிடிக்கள்
காஞ்சிபுரம்:
விஜயேந்திரருக்கு பூக்கூடையில் வைத்து விசிடிக்களை பலமுறை கொடுத்துள்ளதாக சங்கர மடத்திற்கு எதிரே வீடியோ கடை வைத்துள்ளஇருவர் போலீஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் தனிப் படை போலீஸின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 100க்கும்மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. சங்கரமடத்துடன் தொடர்பு வைத்துள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், சங்கர மடத்திற்கு எதிரே வீடியோ கடை வைத்துள்ள சத்யா, பால்கடை வைத்திருக்கும் விஸ்வநாதன் ஆகியோரிடம்போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, இளையவர் விஜயேந்திரருக்கு அடிக்கடி பூக்கூடையில் பூக்களுக்கு இடையேமறைத்து வைத்து விசிடிக்களைக் கொடுத்துள்ளதாக இருவரும் கூறியுள்ளனர்.
அந்த சிடிக்கள் என்ன வகையான சிடிக்கள் என்பது குறித்தும் அவர்கள் இருவரும் போலீஸாரிடம் விளக்கியுள்ளனர். விஜயேந்திரர் சிடிமூலம் திரைப்படங்கள் பார்ப்பதாக முன்பு புகார்கள் எழுந்தன. ஆனால் அவை பெரிய அளவில் பேசப்படவில்லை.
இந் நிலையில் வீடியோ கடை உரிமையாளர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ள தகவல் மூலம் சங்கர மடத்துக்குள் சிடிக்கள் நடமாட்டம்இருந்துள்ளதும், பகலில் ஆன்மீகம், இரவில் திரையுலகம் என சங்கர மடம் இரு வேடம் பூண்டதும் புலனாகியுள்ளது.
இதேபோல் ஜனகல்யாண் நிர்வாகிகள் சென்னை கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் பசுபதி மற்றும் சங்கரராமன் வீட்டின் மேல்பகுதியில்குடியிருக்கும் ஜெகந்நாதன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


