For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருக்குறளை தேசிய நூலாக்க முயற்சிப்பேன்: வாசன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உலகப் பொதுமறையான திருக்குறளை தேசியநூலாக மத்திய அரசு அறிவிக்க முயற்சிகள் எடுப்பேன் என்று காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் ஜி.கே.வாசன், தஞ்சை தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், சீர்காழி சிவசிதம்பரம், நல்லி குப்புசாமிசெட்டியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வாசன் பேசுகையில், திருக்குறள் உலகப் பொதுமறை எனப்புகழப்படும் தனிப் பெரும் நூல். இதை தேசிய நூலாக அறிவிக்கமத்திய அரசிடம் வலியுறுத்துவேன்.

தமிழ் மொழியின் வளமைக்காகவும், கலாச்சாரம், பண்பாட்டைக் காப்பதிலும் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தீவிரமாகபாடுபடுகின்றனர். இவர்களது முயற்சிகளுக்கு தமிழக காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். அவர்களுக்குரிய கெளரவத்தை நாங்கள்நச்சயம் கொடுப்போம் என்றார்.

மொத்தம் 33 எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு வாசன் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் பேசுகையில், மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு டெல்லிவரைதான் உள்ளது. இது நீட்டிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் சினிமாவும், இலக்கியமும் சீர்கெட்டுப் போய்க் கிடக்கிறது. இதை சீர்படுத்த வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும்உள்ளது. தமிழ் இலக்கியத்திற்கு எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அதை சரி செய்யும கடமை தமிழர்களுக்கு உள்ளது.

மலேசியாவில் தமிழ் சிதைக்கப்படுகிறது என்றால் தமிழகம் குரல் கொடுக்க வேண்டும். மலேசியாவில் அச்சடிக்கப்படும் தமிழ் நூல்களைஇந்தியாவில் உள்ள ஒருவர் வாங்க விரும்பினால் அன்னியச் செலவாணி குறுக்கிடுகிறது. இதை சரி செய்ய வேண்டும். மத்திய அரசின்அனுமதியைப் பெற வேண்டும் என்கிறார்கள்.

மலேசியாவில் உள்ள 18 லட்சம் இந்தியர்களில் 99 சதவீதம் பேர் தமிழர்கள். இவர்களின் பிரச்சினைகளை இந்திய அரசு கருணையுடன்கவனித்து சரி செய்ய முன்வர வேண்டும் என்றார் ராஜேந்திரன்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த தமிழ் எழுத்தாளர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். மலேசியஎழுத்தாளர்களுக்கு கருணாநிதி தேநீர் விருந்து அளித்துக் கெளரவித்தார். இந் நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X