• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீதிமன்றத்தில் சரணடைய அப்பு, ரவி முடிவு?

By Staff
|

சென்னை:

Appu சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு விசாரணையை உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் வரை (18 நாட்களுக்கு) ஒத்தி வைக்கப்பட்டுவிட்டதால்,முக்கியக் குற்றவாளியான அப்பு விரைவில் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் சரணடைந்துவிடுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கராச்சாரியார் ஜாமீனில் வெளியே வரும் வரை தலைமறைவாகவே இருக்குமாறு அவனுக்கு ஜெயேந்திரர் தரப்பில் இருந்து சிக்னல்போயுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். அவர் ஜாமீனில் வந்துவிட்டால் எப்படியும் தன்னைக் காப்பாற்றிவிடுவார் என்று நம்பும் அப்பு,இதனால் தான் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறான்.

ஆனால், கீழ் கோர்ட்டுகளிலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடிஆகிவிட்டன. இப்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

தமிழக சிறப்புப் போலீஸ் படைகளின் தேடல் ஒரு பக்கம், வெள்ளைதுரை போன்ற அதிரடி அதிகாரியின் தலைமையிலான டீமின் வலைவீச்சு இன்னொரு பக்கம், க்யூ பிராஞ்ச் உள்ளிட்ட உளவுப் பிரிவினர் பல வகைகளிலும் தந்து வரும் எச்சரிக்கைகள் என அப்புவும் ரவிசுப்பிரமணியமும் ரொம்பவே கலங்கிப் போயிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் உறவினர்களிடம் இவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களைக் கண்காணித்த போலீசாருக்கு அப்புவின் உயிர் பயம்நன்றாகவே புரிந்துவிட்டது.

இதனால் உயிருக்கு ஆபத்து இருக்காது, சரணடையலாம் என்ற தகவலும் அனுப்பப்பட்டது. ஆனால், சரணடைய வேண்டாம் என்றுஅவனுக்கு எதிர் தரப்பில் இருந்து தகவல் போய்க் கொண்டிருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

இப்போது ஜெயேந்திரரின் ஜாமீன் இழுத்துக் கொண்டே போவதாலும் போலீசாரின் வேட்டை தீவிரமாகியிருப்பதாலும் விரைவில் ஏதாவதுஒரு நீதிமன்றத்தில் சரணடைந்துவிட அப்பு முடிவு செய்துவிட்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதே முடிவுக்கு ரவி சுப்பிரமணியமும் வந்துவிட்டதாக போலீஸ் கருதுகிறது.

இதற்கிடையே ஒரு வார இதழுக்கு அப்பு அளித்துள்ள பேட்டியில்,

நான் விரைவில் சரணடையத் தான் போகிறேன். இந்தியாவே ஆடிப்போயிருக்கும் இந்த வழக்கில் தேவையில்லாமல் என்னைச்சேர்த்துவிட்டது போலீஸ். நான் சரண்டராகித் தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால், இப்போது அதற்கான சூழ்நிலைஇருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

சரண்டர் ஆவது குறித்து போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் நான் பேசியது உண்மை தான். நான் சரணடைவதற்கான சூழ்நிலையைஎதிர்பார்க்கிறேன். என் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்ற வேண்டுகோளை போலீசிடம் வைத்துள்ளேன்.

என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்டான வெள்ளைதுரையை என்னைத் தேடும் போலீஸ் படையில் சேர்த்திருக்கிறார்கள். இதனால் என்னைஎன்கெளண்டரில் போட்டுத் தள்ளுவார்களோ என்ற பயம் உள்ளது. ஒரு சாதாரணமான ஆளான என்னைப் போய் ஒரு தீவிரவாதியைப்போல போலீசார் சித்தரிப்பது அவமில்லாத செயல்.

எனது சொத்துக்களை முடக்க முயற்சிக்கிறார்கள். அது நான் பிஸினெஸ் செய்து ஈட்டியது. வருமான வரி கட்டியிருக்கிறேன். நான்ஆற்காட்டாரின் (திமுக மாஜி அமைச்சர் ஆற்காடு வீராசாமி) பினாமி அல்ல. அவரை எனக்கு நன்றாகத் தெரியும். திமுக தவிர அதிமுகஉள்பட பல கட்சிகளிலும் எனக்கு பலரிடம் நெருக்கம் இருக்கிறது.

பெயருக்கு முன் 3 இனிஷியல் கொண்ட அதிமுக புள்ளி என்னிடம் எத்தனை லட்சம் வாங்கியிருக்கிறார் தெரியுமா?

ரவி சுப்பிரமணியம் என் நண்பனும் அல்ல, கூட்டாளியும் அல்ல. தலைமறைவான பின் என்னை மடத்தில் இருந்து யாரும் தொடர்புகொள்ளவில்லை. அண்ணாநகர் ரமேஷ் தற்கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் என்னைச் சேர்க்கே ஏதோபின்னணி இருக்கிறது. போலீசாரின் இந்த நடவடிக்கை சரியானதல்ல.

இவ்வாறு அப்பு கூறியிருக்கிறான்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X