For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

11 மாவட்டங்களில் நிவாரண முகாம்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jaya visits chennaiகடல் கொந்தளிப்பினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிவாரண முகாம்கள்அமைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டனம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர்உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொலைபேசி வசதியுடன் கூடிய அவசர கால முகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் அவர்களது குடும்பத்தினர், உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு அரசுமருத்துவமனைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது, இறுதிச் சடங்குக்கான உதவிகளை செய்வது ஆகியவற்றிற்கும் நிவாரண முகாம்களில்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டாத அருகாமைமாவட்டங்களிலிருந்து அரசு டாக்டர்கள் ஏராளமான அளவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 ஆம்புலன்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளமுகாம்களில் 60க்கும் குறையாமல் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X