For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீளுகின்றன உதவிக் கரங்கள்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போப் ஜான் பால், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியோர்முன் வந்துள்ளனர்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் 6.7 மில்லியன் டாலர் அளவுக்கு முதல் கட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில்இந்த அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா வகையிலும் உதவுமாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளுக்கு போப் ஜான் பால் அழைப்புவிடுத்துள்ளார்.

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாதிக்கப்பட்டநாடுகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து சேவ் சில்ட்ரன், வோர்ல்ட் விஷன், கிரிஸ்டியன் எய்ட் ஆகிய அமைப்புகளின் சார்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும்நிவாரணப் பொருட்களுடன் உதவிக் குழுக்கள் கிளம்பியுள்ளன.

இதே போல ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் பெரும் அளவில் நிவாரண உதவியை அறிவித்துள்ளன.

அமெரிக்கா ரூ.44.5 லட்சம் உதவி:

முதல் கட்டமாக அமெரிக்கா ரூ.44.5 லட்சம் நிதியுதவியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. இது தொடர்பாகஅமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், அமெரிக்க மக்களின் சார்பிலும் அமெரிக்கஅரசின் சார்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயனுள்ள வகையில் இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

அனில் அம்பானி ரூ. 1 கோடி உதவி:

இந் நிலையில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி தனது தனிப்பட்ட நிதியில் இருந்து ரூ. 1 கோடியை நிவாரணஉதவிகளுக்காக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்துள்ளார்.

கர்நாடகம் ரூ. 2 கோடி:

தமிழகத்தில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கர்நாடக மாநிலம் ரூ. 2 கோடி உதவி வழங்கியுள்ளது.

வைகோ ரூ. 10 லட்சம்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷிடம் ரூ. 10லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

ப.சிதம்பரம் ரூ.1 லட்சம்:

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார். அவர் தமிழகத்தில்பாதிப்பிற்குள்ளான சென்னை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உதவி:

இதே போல நிவாரணப் பணிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி திரட்ட ஆரம்பித்துள்ளது. தனதுபங்காக ரூ. 7 லட்சத்தை ஒதுக்கியுள்ள அக் கட்சி பொது மக்களிடம் பணம் திரட்டி பிரதமரிடம் வழங்கவுள்ளது.

துணை ஜனாதிபதி:

துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் தனது ஒரு மாத ஊதியமான ரூ.40,000த்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்:

இதே போல மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் ரூ. 10,000த்தை வைகோ மூலமாக தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம்வழங்கினர்.

நன்கொடைகள் குவிகின்றன:

தமிழகத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஏராளமான பேர் நிதியுதவி அளித்துவருகின்றனர்.

தமிழக கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய நல்ல மனம் படைத்தோர் தாராளமாக உதவி செய்ய முன் வர வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர், ஈரோடு மாவட்ட அரசு ஊழியர்கள், அழகப்பா பல்கலைக்கழக ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தங்களது ஒரு நாள்ஊதியத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் வடக்குவாசல் பகுதிகிராம மக்கள் 4,000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்து நாகை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X