For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு!

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

Jaya visits Kayakumari hospital
கன்னியாகுமரியில் இன்று காலை மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் சில கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது.

கடல் கொந்தளிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. இந் நிலையில் கன்னியாகுமமாவட்டம் கொளச்சல் பகுதியில் இன்று காலை மீண்டும் கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

Jaya meets people in Kanyakumarஇதனால் ஊருக்குள் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு கடல் நீர் புகுந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால்மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 500 உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. இதில் கொளச்சலில் இருந்து மட்டும் 257 உடல்கள்மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப் பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

ஜெயலலிதா வருகை:

இந் நிலையில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா இன்றுநேரில் பார்வையிட்டார்.

காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் பிற்பகல் 12.20 மணிக்கு நாகர்கோவில் வந்தார். புனிதசவேரியார் ஆலயத்திற்குச் சென்ற அவர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார்.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவர் நாகப்பட்டிணம் செல்கிறார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்துஆறுதல் கூறும் ஜெயலலிதா அங்கு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டள்ள பொது மக்களையும் சந்திக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X