For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரீனாவில் இன்றிரவு கண்ணீர் அஞ்சலி: புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

செயற்கைக் கோள் படங்கள்

Marina

மெரீனா கடற்கரை சுனாமி தாக்குதலுக்கு முன்(ஆகஸ்ட் 14, 2004ல் )

தாக்குதலுக்குப் பின் (டிசம்பர் 29ல்)

-->சென்னை மெரீனா கடற்கரையில் இன்று இரவு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெழுகு வர்த்தி ஏற்றி சுனாமிக்குபலியான மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி இரவு மெரீனா கடற்கரையில்ஆயிரக்கணக்கானவர்கள் ஆட்டம், பாட்டுடன் புத்தாண்டை வரவேற்பார்கள். இரவு முழுக்க மெரீனாகடற்கரையில் மக்கள் வெள்ளம் அலைகளுக்கு இணையாக கரை புரண்டோடும்.

ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டை சந்தோஷத்துடன் வரவேற்க முடியாத அளவுக்கு சுனாமி பேரழிவு மக்களின்உள்ளங்களைப் புரட்டிப் போட்டு விட்டது. ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துள்ள சுனாமி அலைசோகத்தால் மக்கள் சோகத்தில் ஆழந்து போய்விட்டனர்.

எனவே இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவு நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு புத்தாண்டு பிரார்த்தனை நிகழ்ச்சிகள்,இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டுவிட்டன.

இதேபோல மெரீனா கடற்கரையிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.அதற்குப் பதிலாக இன்று இரவு கடற்கரை காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கான பொது மக்கள் சேர்ந்துமெழுகுவர்த்தி ஏற்றி, சுனாமிக்குப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இதையொட்டி கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

மெரீனா சுத்தப்படும் பணி தீவிரம்:

இதற்கிடையே சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்ட மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியும் தீவிரமாகநடந்து வருகிறது.

உலகின் இரண்டாவது அழகிய, பெரிய கடற்கரை என்று பெயர் பெற்ற மெரீனாவில் கடற்கரையைத் தாண்டியும்வந்த கடல் நீர், சாலைகளில் புகுந்ததால் காமராஜர் சாலை மற்றும் பிளாட்பாரங்கள் உடைந்துவிட்டன.

மேலும், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் காமராஜர் சாலையில் தூக்கி வீசப்பட்டன. கடலோரசாலையில் சென்ற கார்கள் தூக்கி எறியப்பட்டும், மரத்தில் குத்தியும், கவிழ்ந்தும், பிளாட்பார சுவரில் தொங்கிக்கொண்டும் நிற்கின்றன.

இதுதவிர அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி ஆகியவையும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டன.

இவற்றை சரி செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. மெரீனா கடற்கரையைசுத்தப்படுத்தும் பணியில் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் வந்து விழுந்த படகுகளை கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X