For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்ல சொன்னார் ஜெயேந்திரர்: ரவி வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Raviரூ. 50 லட்சம் செலவானாலும் பரவாயில்லை, சங்கரராமனைத் தீர்த்துக் கட்டி விடு என்று என்னிடம் ஜெயேந்திரர் கூறினார் என்று ரவிசுப்பிரமணியம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆகியுள்ள ரவிசுப்பிரமணியம் நீதிமன்றத்தில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்கூறியுள்ளவற்றில் சில:

சென்னை தியாகராய நகரில் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் பஞ்சாபகேசன். எனது பெயர் சுப்ரமணியன், ஆனால் அனைவரும் ரவிசுப்பிரமணியம் என அழைப்பார்கள். எனக்கு கிருஷ்ணமூர்த்தி, முரளி என்று இரண்டு அண்ணன்கள் உள்ளனர்.

நான் எம்.ஏ. முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். 1985ம் ஆண்டுக்கு எனக்கும், சித்ரா என்பவருக்கும் கலப்புத் திருமணம் நடந்தது.சித்ராவும் எம்.ஏ. பட்டதாரி. எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் நான் முதலில் வேலை பார்த்து வந்தேன். பின்னர் ஜவுளி ஏற்றுமதியில் இறங்கினேன். ஆனால் இதில் எனக்கு சரியானவருமானம் இல்லை. இந் நிலையில், எனக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் பிரிந்து சென்று விட்டார்.

அப்போது தி.நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அவரது குடும்பச் சொத்து பிரச்சினை தொடர்பாக என்னிடம் வந்தார். அப்போதுஅவரது மனைவி சரஸ்வதி (ஹார்லிக்ஸ் சியாமளா), அவரது அக்காள் லீலா ஆகியாருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.

லீலாவுக்கு சங்கர மடத்தில் பழக்கம் இருந்தது. அதன் மூலம் எனக்கு ஜெயேந்திரர் அறிமுகம் கிடைத்தது.

1995ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்க்கவிஸ்வநாதன், சரஸ்வதி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். தனித்தனியாக ஜெயேந்திரரை சந்தித்தோம்.

சரஸ்வதி சந்தித்து விட்டு வெளியே வந்தபோது சோகமாக இருந்தார். என்ன என்று கேட்டபோது, ஜெயேந்திரர் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றதாகவும், தான் சம்மதிக்கவில்லை என்றும்

சரஸ்வதி கூறினார். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டேன். அதற்கு அடுத்த நாள் சரஸ்வதிக்கு ஜெயேந்திரர்போன் செய்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு எனக்கும், ஜெயேந்திரருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. சங்கர மடம் சார்பில் நடத்தும் கல்லூரிக்கு ரூ1 கோடியில் கட்டடம் கட்டும் பணியை எனக்கு ஜெயேந்திரர் கொடுத்தார். அதை சிறப்பாக முடித்துக் கொடுத்தேன்.

இதனால் மாணவர் விடுதிகளைக் கட்டும் வேலையும் எனக்கே கிடைத்தது. இதன் மூலம் ஜெயேந்திரருடன் நான் நெருங்கத்தொடங்கினேன்.

ஜெயேந்திரருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்தது. பிரேமா, ரேவதி, பத்மா என பல பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துப்பேசுவார்கள். தினசரி மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை ஜெயேந்திரர் ஓய்வாக இருப்பார்.

அப்போது ஆபாசப் படங்களையும் அவர் தவறாமல் பார்ப்பார். அந்த நேரத்தில்தான்

பெண்களையும் அவர் சந்திப்பார்.

1998ம் ஆண்டு திருவொற்றியூர் சங்கரா காலனி அமைக்கும பொறுப்பை ஜெயேந்திரர் என்னிடம் கொடுத்தார். ரூ.12 கோடி செலவில் 333வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகளைக் கட்டுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

காலனிக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை நான்தான் அகற்றிக் கொடுத்தேன். ஜெயேந்திரர் என் மீது பாசமாக இருந்தார். நானும் அவரிடம்அன்பாக இருந்தேன். அவரின் 63வது பிறந்த

நாளின்போது ரூ. நாலரை லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடத்தை சூட்டினேன்.

64வது பிறந்த நாளின்போது இன்னொரு தங்க கிரீடம் சூட்டினேன். 65வது பிறந்த நாளின்போது 65 தங்கக் காசுகளை வழங்கினேன்.

2001ம் ஆண்டின் இறுதியில்தான் அப்பு எனக்கு அறிமுகமானார். எனது நண்பர் சரவணன் என்பவர்தான் அப்புவை எனக்குஅறிமுகப்படுத்தி வைத்தார். அரசுத் தரப்பில் அப்புவுக்கு தொல்லைகள் இருப்பதாகவும், அதை சரி செய்ய ஜெயேந்திரர் உதவி தேவைஎன்றும் என்னிடம் கோரப்பட்டது.

இதையடுத்து அப்புவை காரில் காஞ்சிபுரம் அழைத்துச் சென்று ஜெயேந்திரரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். இன்னொரு நாள் வந்துதன்னை சந்திக்குமாறு அப்போது ஜெயேந்திரர் கூறினார். அதன்படி இன்னொரு நாள் நான், அப்பு, கதிரவன் ஆகியோர் சென்றோம்.

அப்போது எங்களிடம் ஜெயேந்திரர், 2 பேர் என்னை பிளாக்மெயில் செய்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு அப்பு, கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து இன்னொரு நாள் காலை 8 மணிக்கு ஜெயேந்திரர் எனக்குபோன் செய்தார். உடனே வருமாறு கூறினார். நானும் உடனடியாக சென்று பார்த்தேன். நான் போனபோது ஜெயேந்திரருடன் ரகுவும்இருந்தார்.

அப்போது சங்கரராமன், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை என்னிடம் கொடுத்தார். அதைநான் எனது உறவினர் சந்தானம் மூலம் கதிரவனிடம் கொடுத்தனுப்பினேன்.

அதன் பிறகுதான் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டார். இந்தத் தகவலை ஜெயேந்திரரே எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கும், மடத்திற்கும் தொடர்பு இல்லை என்பதைக் காட்டுவதற்காக சங்கர மட ஏஜென்டு நீலகண்ட அய்யர், நெய்வேலிகிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரிடமும் பிரசாதம் கொடுத்து, ஏராளமான பணக் கட்டுக்களையும் கொடுத்து ராதாகிருஷ்ணனைப் பார்த்துநலம் விசாரிக்கச் சொல்லி அனுப்பினார் ஜெயேந்திரர்.

ராதாகிருஷ்ணனைத் தாக்கியதற்காக ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொண்ட பெரியக் கட்டு ஒன்றை ஜெயேந்திரர் என்னிடம் கொடுத்தார்.நான் அதை கதிரவனிடம் கொடுத்தேன்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நானும், அப்புவும் காஞ்சிபுரம் ஜெயபாலா ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு கதிரவனும் வந்தார். 3பேரும் சேர்ந்து ஜெயேந்திரரைச் சந்தித்தோம். அப்போது சுந்தரசே அய்யரும் உடனிருந்தார்.

அந்த சமயத்தில், இறுதி அறிவிப்பு என்ற தலைப்பில் சங்கரராமன் எழுதிய கடிதத்தை ஜெயேந்திரர்

அப்புவிடம் கொடுத்தார். இனிமேல் சங்கரராமனிடமிருந்து இதுபோன்ற லெட்டர் வரக் கூடாது, ரூ. 50 லட்சம் செலவானாலும்பரவாயில்லை, அவனைத் தீர்த்துக் கட்டி விடுங்கள் என்றார் ஜெயேந்திரர்.

பிறகு கதிரவனை வெளியே அனுப்பி விட்டு நானும், அப்புவும் ஜெயேந்திரருடன் பேசினோம். இந்த விஷயத்தை விஜயேந்திரரிடம் கூறிவிட்டுப் போகுமாறு ஜெயேந்திரர் தெரிவித்தார்.

அதன்பஐ விஜயேந்திரரிடம் தெரிவித்தோம். அவரும், இதற்கான பணத்தை தனது தம்பி ரகு ஏற்பாடு செய்வார் என்று தெரிவித்தார்.பின்னர் நாங்கள் சென்னைக்குக் கிளம்பினோம். வழியில், காரில் இருந்தபடியே, சங்கரராமனைத் தீர்த்துக் கட்டி விடுமாறு கதிரவனிடம்அப்பு தெரிவித்தார்.

மறுநாள் நானும் கதிரவனும் போர்டு காரில் (டிஎன்5-இ2112) காஞ்சிபுரம் வந்தோம். வரதராஜப் பெருமாள் கோவில் அருகே 16 கால்மண்டபத்தில் காரை விட்டு இறங்கினோம். அப்போது கதிரவன் செல்போனில் யாரையோ தொடர்பு கொண்டார்.

சிறிது நேரத்தில் ரஜினி என்ற சின்னா அங்கு வந்தார். காரின் முன்பகுதியில் அவர் ஏறிக் கொண்டார். 3 பேரும் காரில் சங்கரராமன்வீட்டுக்குச் சென்றோம். சங்கரராமன் வீட்டை ரஜினிக்கு கதிரவன் அடையாளம் காட்டினார்.

அன்றே சங்கரராமனை முடித்து விடுமாறு கூறினார். பின்னர் ரூ. 10,000 பணம் கொடுத்தார்.

பின்னர் சங்கர மடத்திற்குச் சென்று ஜெயேந்திரரிடம் விஷயத்தைக் கூறி விட்டு சென்னைக்குக கிளம்பி வந்து விட்டோம்.

அடுத்த நாள் செப்டம்பர் 3ம் தேதி மாலை 4 மணிக்கு அப்பு எனக்கு போன் செய்து சோழா ஹோட்டலுக்கு வருமாறு கூறினர். நானும்போனேன். அப்போது கதிரவனும் உடன் இருந்தார். மாலை 6.15 மணிக்க காபி குடித்தோம். அப்போது கதிரவனுக்கு போன் வந்தது.

போனில் பேசிய கதிரவன், சங்கரராமன் கதை முடிந்ததாக சைகை மூலம் தெரிவித்தார். பின்னர் ரூ. 10 லட்சம் கூலியை அப்புவிடம்கொடுத்தேன். அதை கதிரவன் பெற்றுக் கொண்டார். அதற்கான ரசீதையும் நான் பெற்றுக் கொண்டேன்.

பின்னர் அன்று இரவு 8.30 மணியளவில் நான், அப்பு, கதிரவன் ஆகியோர் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில்சந்தித்தோம். இரவு அங்கேயே தங்கினோம்.

அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கெல்லாம் நான் விமானம் மூலம் மும்பை சென்று விட்டேன். அங்கு செம்பூரில் தங்கியிருந்தேன்.கிளம்பும் முன் ஜெயேந்திரரிடம் பேசினேன். ஒரு நாள் மும்பையில் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பி விட்டேன்.

அதன் பின்னர் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டேன். பின்னர்

செப்டம்பர் 6ம் தேதி கிருஷ்ணஜெயந்தி அன்று ஜெயேந்திரரை சந்தித்தேன்.

அப்போது அலுமினியப் பெட்டி ஒன்றில் ரூ.5 லட்சம் பணத்தை என்னிடம் கொடுத்து கதிரவனிடம் கொடுக்குமாறு கூறினார். சொன்னதைசெய்து விட்டாய் என்று கூறி என்னைப் பாராட்டி இனிப்பும் வழங்கினார்.

இந் நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாவதை அறிந்த நான் அவரைப் போய்ப் பார்த்தேன். கால் மேல் கால் போட்டவாறுஉட்கார்ந்திருந்த ஜெயேந்திரர், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் கையை உன் மீது காட்டி விடுவேன்.

என்னைக் கைது செய்தால் இந்தியாவே குலுங்கும், இந்த ஆட்சியே இருக்காது. எனக்கு எந்தப்

பிரச்சினையும் வராது என்றார். இதனால் நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந் நிலையில் சில நாட்கள் கழித்து கதிரவன் என்னை சந்தித்து போலி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் சரணடைய வைப்பதற்காக ரூ. 20லட்சம் வேண்டும் என்றார். நான் ஜெயேந்திரரை சந்தித்து கேட்டேன். அவரும் ரூ.20லட்சம் கொடுத்தார்.

சென்னை அமராவதி ஹோட்டலில் வைத்து அதைக் கொடுத்தேன். அதன்பின்னர் போலி

குற்றவாளிகள் சென்னை நீதிமன்றத்தில் சரணடைய வைக்கப்பட்டனர்.

இந் நிலையில் கதிரவன் போலீஸில் சிக்கினார். இதைத் தொடர்ந்து ஆந்திரா சென்றார் ஜெயேந்திரர். நானும் இந்தியா முழுவதும் பலஇடங்களில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

கடைசியாக குருவாயூரில் தங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்கினேன் என்று ரவி சுப்ரமணியம் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில்கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X