For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடும் நிதி நெருக்கடியில் காஞ்சி சங்கர மடம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Kanchi Mutt காஞ்சி சங்கர மடத்தின் 181 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் கடும் நிதி நெருக்கடியில் மடம் சிக்கித் தவிக்கிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது தம்பி ரகு உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயேந்திரக்குஉச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்து அவர் இப்போது கலவை கிராமத்தில் தங்கியிருக்கிறார்.

பாரத ஸ்டேட் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி உட்பட 183வங்கிகளில் இருந்த சங்கர மடத்தின் வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கினர்.

இதனையடுத்து நிர்வாக பணிகளுக்காக வங்கி கணக்குகளை முடக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சங்கரமடம் கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்று 2 வங்கி கணக்குகளை மட்டும் சங்கர மடம் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

ஆனால் 83 பள்ளிகள், ஒரு நிகர் நிலைப்பல்கலைக்கழகம், 2 கல்லூரிகள், 12 மருத்துவமனைகள் ஆகியவற்றின் அன்றாட செலவுகளை 2வங்கி கணக்குகளை மட்டும் வைத்து சரி செய்ய முடியாமல் சங்கர மட நிர்வாகிகள் தவித்து வருகிறார்கள்.

மேலும் சங்கர மடத்தின் செக்குகளை வாங்க வாடிக்கையாளர்கள் தயங்குகின்றனர். இது குறித்து சங்கர மட நிர்வாகி ஒருவர் நிருபர்களிடம்கூறுகையில்,

2 வங்கி கணக்குகள் மூலம் சங்கரமடத்தின் 10 சதவீத தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது. கடந்த 17ம் தேதிக்கு சங்கரமடம்கொடுத்த செக்குகளை வங்கிகள் திருப்பி அனுப்பி விட்டன. விரைவிலேயே மடத்தின் அனைத்து வங்கி கணக்குகளையும் மீண்டும் இயக்கநீதிமன்றம் அனுமதி அளிக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X