For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ. 2லட்சம்சுனாமி நிவாரண நிதி அளித்தார்.

Tirumavalavan and Jayalalithaஜெயலலிதாவை மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வந்த திருமாவளவன் சமீப காலமாக ஜெயலலிதா எதிர்ப்பை குறைத்துக்கொண்டுள்ளார்.

குறை சொல்லக் கூடியதாக இருந்தால் மட்டும் குறை சொல்கிறார், பாராட்டும்படியான காரியங்களை தயங்காமல் பாராட்டுகிறார்.

இந் நிலையில் இன்று காலை தலைமைச் செயலகம் வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது கட்சியின் சார்பில் ரூ. 2 லட்சம்நிதியை சுனாமி நிவாரணப் பணிகளுக்காக வழங்கினார்.

பின்னர் ஜெயலலிதாவுடன் சிறிது நேரம் தனியே ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

சுனாமி நிவாரண நிதிக்கு எங்களது அமைப்பின் சார்பில் ரூ. 2 லட்சம் நிதியளிக்கவே வந்தேன். இந்த நிதியில் ரூ.1லட்சம் எங்களது அமைப்பின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் திரட்டப்பட்டது, ரூ. 1 லட்சம் மும்பை மற்றும்குவைத்தில் உள்ள எங்களது அமைப்பினரால் வழங்கப்பட்டது.

சுனாமி நவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளதற்காக முதல்வரைபாராட்டினேன்.

மழலையர் பள்ளி முதல் பள்ளி இறுதி வரை அறிவியல் தமிழ் பாடத்தை அறிமுகப்படுத்தியது, தாழ்த்தப்பட்டவகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதைப் போல பிற்பட்ட வகுப்பினருக்கும் இலவச சைக்கிள் வழங்கியதுஆகியவற்றையும் பாராட்டினேன்.

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைக்கக் கூடாது, கோவில்களில் தமிழ் வழிபாடு, நீதிமன்றங்களில் தமிழ்நடைமுறைகள், தொலைக்காட்சிகளில் தமிழ் மரபு உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பது உள்பட தமிழ் பாதுகாப்புஇயக்கத்தின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முதல்வரைக் கேட்டுக் கொண்டேன்.

அவருடன் அரசியல் பேசவில்லை. எந்த அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்பது தேர்தல் சமயத்தில்முடிவு செய்யப்படும். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும், பாமகவும் ஒரே அணியில்தான் இருக்கும் என்றுராமதாஸ் கூறியுள்ளார். அவர் தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறார்.

கூட்டணி ஆட்சி குறித்து இளங்கோவன் பேசியது சரி தான். ஆனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் அவர் தாக்கிப் பேசியதுசரியல்ல.

தமிழகத்தில் எதிர் காலத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன என்றார்திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X