For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலட்சுமி: சிபிஐக்கு 1 மாதம் அவகாசம்

By Staff
Google Oneindia Tamil News

தாராபுரம்:

போலீஸ் அதிகாரிகள் மீதி செக்ஸ் புகார் கூறிய ஜெயலட்சுமி வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கையை தாக்கல்செய்ய சிபிஐக்கு மதுரை உயர்நீதி மன்றக் கிளை மேலும் ஒரு மாதம் காலம் அவகாசம் அளித்துள்ளது.

Jayalakshmiஏட்டு முதல் எஸ்.பி. வரை 22 போலீஸ் அதிகாரிகள் செக்ஸ் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்ஜெயலட்சுமி.

ஜெயலட்சுமி, அவரது தந்தை அழகிரிசாமி ஆகியோர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்தவாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.

இதை தொடர்ந்து சி.பி.ஐ. கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையில் அதிகாரிகள் மதுரையில் 3 மாதம் முகாமிட்டுவிசாரணை நடத்தியது.

ஜெயலட்சுமி கூறியிருந்த செக்ஸ் புகார் மற்றும் அவரது தந்தை அழகிரிசாமி தாக்கல் செய்திருந்த கடத்தல் புகார்ஆகியவற்றை இரு வழக்காக எடுத்துக்கொண்டு சி.பி.ஐ. விசாரணையில் இறங்கியது.

தற்போது ஜெயலட்சுமி கடத்தப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.ஐ. முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. மதுரைஉயர்நீதி மன்றக் கிளை விதித்த கெடு 6ம் தேதி நெருங்குகிற நிலையில் சி.பி.ஐ. வக்கீல் ஜேக்கப் டேனியல்,ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் நேற்று விசாராண அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையில் சுமார் 225 பக்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயலட்சுமி கூறியிருந்த செக்ஸ் புகார் தொடர்பாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இறுதிஅறிக்கையை தயாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸார் அனைவரிடமும் விசாரணைமுடிவடைந்துள்ள நிலையில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு சி.பி.ஐ.மனுதாக்கல் செய்தது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. சி.பி.ஐ. யின் கோரிக்கைக்கு அரசுத்தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபம்தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏப்ரல் 4-ந்தேதிக்குள் இந்த வழக்கு விசாரணையின்இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இதற்கிடையே தன் மீது தாராபுரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள செக் மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜு. இவரிடம்ஜெயலட்சுமி ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதாகவும், அந்தத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக காசோலையைகொடுத்தாகவும், ஆனால் வங்கிக் கணக்கில் பணமில்லை என காசோலை திரும்பி வந்து விட்டதாகவும் புகார்எழுந்தது.

இதைத் தொடர்ந்து சண்முகராஜு தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி மீது வழக்குத்தொடர்ந்தார். இந் நிலையில் ஜெயலட்சுமி சார்பில் அவரது வழக்கறிஞர் ஆர். வெங்கடேசன் நீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஜெயலட்சுமி கூறியிருப்பதாவது:

மதுரை கனரா வங்கிக் கிளையில் கடந்த 2003ம் ஆண்டு கணக்கு ஒன்றை துவக்கினேன். இன்ஸ்பெக்டர்இளங்கோவன் மூலமாகத்தான் இந்த கணக்கு தொடங்கப்பட்டது.

அதன் பின்னர் என்னிடமிருந்த காசோலைப் புத்தகத்தை இளங்கோவனே வாங்கிக் கொண்டுவிட்டார்.சண்முகராஜுக்கு நான் கொடுத்ததாக கூறப்படும் காசோலை 2004ம் ஆண்டுதான் வழங்கப்பட்டுள்ளது.

அப்போது என்னிடம் காசோலைப் புத்தகமே இல்லை. இந் நிலையில் அவருக்கு நான் காசோலை கொடுத்ததாகக்கூறுவது நியாயமற்றது. எனக்கும் இந்த வழக்குக்கும் எவ்வித சம்பந்தமே இல்லை.

எனவே என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலட்சுமி.

போலீசார் மீது ஜெயலட்சுமி செக்ஸ் புகார்களை அள்ளி வீசியவுடன், ஜெயலட்சுமி மீது பல வழக்குகள் திடீர்திடீரென முளைத்தன. இவையெல்லாம் தமிழக போலீசாரால் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் என ஜெயலட்சுமி கூறிவருகிறார்.

அந்த வகையில் தான் இந்த வழக்கையும் தன் மீது போலீசார் ஜோடித்துள்ளதாக ஜெயலட்சுமி வாதிடுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X