For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரங்கசாமியின் நிறம் வெளுக்கும்: கண்ணன் ஆவேசம்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

முதல்வர் பதவியில் இருந்து கொண்டு வரலாறு காணாத வகையில் ஊழல் புரிந்து வரும் ரங்கசாமியின் உண்மைநிறம் இன்னும் சில மாதங்களில் வெளுக்கும் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கண்ணன் கூறியுள்ளார்.

புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கண்ணன் ஆதரவாளர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். சுதேசி காட்டன்மில் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக சென்று பாரதி பூங்காவைஅடைந்தது. அங்கு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் கண்ணன் மிகவும் ஆவேசமாகப் பேசினார். அவர் பேசுகையில், முதல்வர் ரங்கசாமியின் ஊழல்நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர் நாராயணசாமியிடமும், மேலிடத்திலும் பலமுறை நான் புகார்கூறியுள்ளேன்.

ஆனால் எதற்குமே பலன் இல்லாமல் போன காரணத்தால்தான் மக்களை நேரடியாக சந்திக்க முடிவு செய்தேன்.

ரங்கசாமியின் ஊழல்கள் குறித்து நாராயணசாமியே என்னிடம் பலமுறை தெரிவித்துள்ளார். அப்படிக் கூறியவர்இன்று பதவி சுகத்திற்காக பல்டி அடித்துள்ளார்.

ரங்கசாமி அமைச்சரவையில் உள்ள அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து போய்க் கிடக்கிறது. பொதுப்பணித்துறையில் ஊழல், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஊழல், குவாரியிலும் ஊழல்.

இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்லி திருத்திக் கொள்ளுமாறு கூறினால் அதை கட்சி விரோதந நடவடிக்கைஎன்று கூறி என்னை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.

இன்னும் 6 மாதங்களில் ரங்கசாமியின் உண்மை நிறம் மக்களுக்குத் தெரிய வரும். ரங்கசாமியும், நாராயணசாமியும்பசுத் தோல் போர்த்திய புலிகள். பாண்டிச்சேரியில் காங்கிரஸ் இவ்வளவு கேவலமாக இருப்பதற்குநாராயணசாமிதான் காரணம்.

இவர்களுக்கு எதிரான எனது அனைத்துப் புகார்களுக்கும் நான் ஆதாரங்களை வைத்துள்ளேன். சோனியா காந்திமீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அது ஒரு நாளும் குறையாது.

நானும், எனது ஆதரவாளர்களும்தான் உண்மையான தொண்டர்கள். நாங்கள் இருக்கும் இடத்தில்தான் காங்கிரஸ்கட்சியும் இருக்கும். இப்போது சுய நலக் கும்பல்களின் கையில் சிக்கி காங்கிரஸ் அவஸ்தைப்படுகிறது. அதைநாங்கள் விரைவில் மீட்போம்.

சுய மரியாதையுள்ள யாரும் காங்கிரஸில் இருக்க மாட்டார்கள். எனக்காக பதவி விலகிய அமைச்சர் லட்சுமிநாராயணனை நான் வெகுவாக பாராட்டுகிறேன் என்றார் கண்ணன்.

கண்ணன் ஆதரவாளர்கள் நடத்திய கண்டன பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தையடுத்து பாண்டிச்சேரி சட்டசபை,அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X