For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரம்பை மீறினால்...: திமுகவுக்கு ஜெ., காளிமுத்து கடும் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையை கேலி செய்தும், சபாநாயகரை அவமரியாதை செய்தும் தொடர்ந்து பேசி வருவதாக முதல்வர்ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இதுபோல திமுகவினர் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் காளிமுத்துவும்கடுமையாக எச்சரித்துள்ளார்.

சட்டசபை இன்று காலை கூடியதும், மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் பழனியாண்டிக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலிசெலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பார்வர்ட் பிளாக் கட்சி உறுப்பினர் சந்தானத்தை சபாநாயகர் காளிமுத்து பேச அழைத்தார்.

சந்தானம் பேசுகையில்,

சட்டசபையிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போட்டிசட்டசபையையும் நடத்தியுள்ளனர். அந்த சமயம், திமுக சட்டசபை துணைத் தலைவர் துரைமுருகன், சபாநாயகர் போல மிமிக்ரிசெய்து அவரைக் கேலி செய்துள்ளார். இது அவை மரபை மீறிய செயல் ஆகாதா என்று கேட்டார்.

அதற்கு சபாநாயகர் காளிமுத்து, அது அவை மரபை மீறிய செயல்தான் என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதாதிமுகவை மிகக் கடுமையாகக் கண்டித்துப் பசினார்.

ஜெயலலிதா பேசுகையில், சபாநாயகர் மிகவும் பொறுமையானவர் என்று உறுப்பினர் சந்தானம் கூறினார். ஒருவருக்கு பொறுமைஅவசியமானதுதான், நல்ல விஷயம் கூட. ஆனால் எதற்கு ஒரு அளவு இருக்கிறது.

பொறுமையை எல்லா விஷயத்திலும் கடைப்பிடித்தால் நாம் கடமை தவறியவர்கள் ஆகி விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.அந்த அளவுக்கு திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் உள்ளன.

சட்டசபையை கொச்சைப்படுத்துகிறார்கள், சபாநாயகரை கிண்டலடிக்கிறார்கள். இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது.

சட்டசபையில் உள்ள மற்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபையை மதிக்கிறார்கள், சபை மரபுகளை மதிக்கிறார்கள்.காங்கிரஸ் உறுப்பினர்களும், பாமக உறுப்பினர்களும், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் ஒருபோதும் சபை மரபுகளைகொச்சைப்படுத்தியதில்லை, கெளவரம் கெடும் அளவுக்கு நடந்து கொண்டதில்லை. அவர்கள் மிகவும் அமைதியாகபேசுகிறார்கள்.

ஆனால் திமுகவினர் மட்டும் யாருக்கும் கட்டுப்படுவதில்லை. தாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்,தங்களை கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதுபோல அவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதை நான் இன்று, நேற்றுசொல்லவில்லை. கடந்த 4 வருடமாக இவர்களைப் பார்த்து, கவனித்துத்தான் இதைச் சொல்லுகிறேன்.

திமுக துணைத் தலைவரான துமுைரருகன், அமைச்சரைப் பார்த்து ஏய் என்று கூறுகிறார். இன்னொரு திமுக உறுப்பினரானஎம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்எல்ஏ சந்தானத்தைப் பார்த்து, யாரடா என்கிறார்.

பரிதி இளம்வழுதியோ, மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று கூட விளிக்க விரும்பாமல், கையை நீட்டியும், சப்தமாகவும்,கோபமாகவும் பேசுகிறார். இன்னொரு உறுப்பினரான ரங்கநாதனோ, எப்போது பார்த்தாலும் யாருடனாவது சப்தமாக பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும், கிண்டலடித்துக் கொண்டும் இருக்கிறார்.

இப்படி சபையை மதிக்காமல், அதன் மரபுகளை அவமானப்படுத்தி, சபையில் உள்ள மற்றவர்களுக்கு பெரும் இடையூறாகதிமுகவினர் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட திமுகவினர் விஷயத்தில் இனியும் சபாநாயகர் அமைதி காத்தால், அவர் தனதுகடமையை செய்யத் தவறி விட்டார் என்றுதான் எண்ண வேண்டியது வரும்.

சபாநாயகர் யாராக இருந்தாலும் சரி, முதல்வர் யாராக இருந்தாலும் சரி, அமைச்சர்கள் யாராக இருந்தாலும் சரி, சட்டசபைக்குள்நுழைந்து விட்டால், சபையை மதித்தே ஆக வேண்டும், சபையின் மரபுகளை, கண்ணியத்தை காத்தே ஆக வேண்டும்.

சபாநாயகர் இருக்கையில் யார் அமர்ந்தாலும் அவருக்குரிய மரியாதையை அனவைரும் கொடுத்தாக வேண்டும். அந்தஆசனத்தின் கண்ணியம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தினந்தோரும் விதிமுறைகளை மீறி, சபை மரபைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் திமுகவினர் விஷயத்தில்இனியும் சபாநாயகர் அமைதி காக்க கூடாது என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதா பேசி முடித்த பின்னர் சபாநிாயகர் காளித்து பேசுகையில், ஒரு அமைச்சரைப் பார்த்து திமுகவினர் ஏய் என்றுசொல்வதும், எப்போது பார்த்தாலும் மரபை மீறும் வகையில் சிரித்துக் கொண்டும், கிண்டலடித்துக் கொண்டும் திமுகவினர்இனியும் நடந்து கொள்ளக் கூடாது.

சபையின் மரபை சீர்குலைக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் இனியும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் டவடிக்கைஎடுக்கப்படும்.

பேச வேண்டும் என்று விரும்பினால் முறையாக, எனது அனுமதியுடன் பேசலாம். அதை விடுத்து கூச்சல் போடுவது,தரக்குறைவாக மற்றவர்களை இகழ்வது என்று திமுகவினர் நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையா, சசிகாவின் காலில் விழுந்து ஆசி பெற்றதுநினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X