For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனாமி: மீனவர்களுக்கு ஜெ. மேலும் சலுகைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், புதிதாக வாங்கும் வள்ளம், கட்டுமரம், இயந்திரப் படகுகள், இதரபொருட்கள் மீதான விற்பனை வரியை முழுவதுமாக தள்ளுபடி செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில், அவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், சுனாமி தாக்குதலால்தமிழக கடலோர பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

உயிர்கள் மட்டுமல்லாது உடைமைகளையும் இழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நிரந்தர மறு வாழ்வு பெற அனைத்துவகையிலும் தமிழக அரசு உதவி வருகிறது.

இதுவரை ரூ. 902 கோடி அளவில் மறு வாழ்வு உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மீனவர்கள் மீது தனி அக்கறைசெலுத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்காக ரூ. 461 கோடி மதிப்புள்ள வாழ்வாதாரதிட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள், வள்ளங்கள், இயந்திரப் படகுகள், பிற பொருட்களை புதிதாக வாங்குவதற்குமானியங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முழுமையாக பாதிப்படைந்த கட்டுமரத்திற்குப் பதில்,

ரூ. 32,000 வரம்புக்கு உட்பட்டு, புதிய கட்டுமரங்களை வாங்குவதற்கு மொத்த விலையும் மானியமாக வழங்கப்படுகிறது.அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

புதிதாக வள்ளம் வாங்குவதற்கு, அதற்குரிய தொகையில் 50 சதவீதம் அதாவது ரூ. 75,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

முழுமையாக சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு மாற்றாக, அதற்கான தொகையில் 35 சதவீதம் மானியமாகவழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

பாதியளவு சேதமடைந்த படகுகளை செப்பனிட ரூ. 3 லட்சம் வரை அதாவது 60 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.

புதிய வள்ளம், கட்டுமரம், இயந்திரப் படகுகளை வாங்குவதற்குரிய முழுத் தொகையையும் மானியமாகவே வழங்க வேண்டும்என மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

தற்போது புதிதாக வாங்குவதையும், பழுது பார்ப்பதையும் இலகுவாக்குக்கும் வகையில் முழுமையான விற்பனை வரி விலக்குஉத்தரவிட்டுள்ளேன். வள்ளம், கட்டுமரம், இயந்திரப் படகு, மோட்டார்கள், இதர பொருட்களை வாங்க 12 சதவீதம் விற்பனைவரி விதிக்கப்படுகிறது.

இதை முழுமையாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, கட்டுமரம் செய்வதற்கான மரத்திற்கு 10 சதவீத விற்பனை வரிவிதிக்கப்படுகிறது. இதையும் ரத்து செய்து ஆணையிட்டுள்ளேன். இது நடப்பு நிதியாண்டில் அதாவது 2005-06ம் ஆண்டுமுழுவதும் அமலில் இருக்கும்.

இதன் மூலம் மீன் பிடி கலங்களின் விலை வெகுவாக குறையும். இதேபோல, மத்திய அரசும், கலால் வரி, சேவை வரியிலிருந்துமுழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X